அன்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் KaiOS கொண்டு இயங்கும் ஜியோபோன் மற்றும் சில பீச்சர் போன்களுக்கான வாட்ஸ்அப்பில் கூடிய விரைவில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்; அம்சம் அறிமுகம் ஆகும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
அன்மையில் கியோஸ் ஜோ கிரின்ஸ்டெட், ஆண்ட்ராய்டு சென்ட்ரலுக்கு அளித்த பேட்டியில், தெரிவித்தது என்னவென்றால்,ஜியோபோனில் உள்ள வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் அம்சமானது கோல்ட் மாஸ்டர் நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பிட்டு
சொல்ல வேண்டும் என்றால் விரைவில் இந்த அம்சம் KaiOS பயனர்களுக்கு வழங்கப்படும் என்று அர்த்தம்.
பின்பு KaiOS அப்டேட் வழியிலான வாய்ஸ் காலிங் அம்சமானதும் கூடிய விரைவில் உருட்டப்படும் என்றும்,அதற்கான காலக்கெடு எதுவம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வாய்ஸ் காலிங் அம்சத்தினை குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் மற்றும்பீச்சர் போன்களில் செயல்படுத்துவதில் நிறைய சாவல்கள் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாட்ஸ்அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா பதிப்பில் கியூஆர் கோட் வசதியை சேர்த்துள்ளது, அதன்படி வாட்ஸ்அப் பீட்டா 2.20.171 பதிப்பில் கியூஆர் கோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த கியூ ஆர் கோட் ஆனது வாட்ஸ்அப் செட்டிங்ஸ் மெனுவின் ப்ரோஃபைல் பகுதியில் இயக்க முடியும். மேலும் கியூஆர் கோடுகளை நண்பர்களுக்கு அனுப்பி உங்களது நம்பரை பகிர்ந்து கொள்ள முடியும்.
அதாவது இந்த கியூஆர் கோடினை அனுப்புவதோடு மற்றவர்களின் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்து அதனை காண்டாக்ட் லிஸ்ட்ல் சேர்த்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. பின்பு ஏற்கனவே உருவாக்கிய கியூஆர் கோடினை வைத்து கொள்ளவோ அல்லது ரீசெட் செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் இந்த அம்சம் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டுள்ளதால், விரைவில் ஸ்டேபில் பதிப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். பின்பு இதேபோன்ற அம்சத்தினை நேம்டேக் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் வழங்கி வருகிறது. இதனை கொண்டு இன்ஸ்டாவில் இருக்கும் மற்ற நண்பர்களை கண்டுபிடிக்க முடியும்.