வாட்ஸ் ஆப் குழு அட்மின்களுக்கு முக்கிய தகவல் – தவறாமல் படிங்க!!

 


வாட்ஸ் ஆப் குரூப்களில் அதன் உறுப்பினர்கள் பதிவிடும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு அக்குழுவின் அட்மின் பொறுப்பாக முடியாது என மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் பதிவு:

மும்பையை சேர்ந்த கிஷோர் தரோன் என்ற ஒருவர் நிர்வாகியாக இருக்கும் வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் ஒருவர், அந்த குழுவில் உள்ள பெண்ணை பற்றி ஆபாசமாக சித்தரித்து பேசியுள்ளார். அந்த கருத்துக்கள் ஆபாசமாகவும், சர்சைக்குரியதாகவும் கருதப்பட்டது. இருந்தாலும் வாட்ஸ் ஆப் குழுவிலிருந்து அந்த கருத்துக்களை அவர் நீக்கவில்லை. இதனால் அந்த வாட்ஸ் ஆப் குழுவின் நிர்வாகி (Admin) கிஷோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரது தரப்பிலிருந்து கோரிக்கைகைகள் எழுந்து வந்தது.ந்

 இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கிஷோர் என்பவர் மீது கோண்டியா மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி கிஷோர் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஹக், எ.பி.போர்கர் ஆகியோர் கிஷோர் மீது எழுந்த வழக்கை ரத்து செய்தனர்.

அந்த வழக்கு விசாரணையின் போது, வாட்ஸ் ஆப் குழுவை சேர்ந்த ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால் அந்த குழுவின் நிர்வாகி அதற்கு பொறுப்பாக முடியாது. அந்த கருத்துக்கும் குழுவின் நிர்வாகிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் வேண்டுமானால் சம்பந்தப்பட்ட நபரை வாட்ஸ் ஆப் குழுவிலிருந்து நீக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

1 கருத்துகள்

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை