
புது தில்லி: வரவிருக்கும் வாரத்தில், வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் இன்ஸ்டாகிராம் ( Instagram) போன்ற சமூக ஊடக செயலிகளின் தாய் நிறுவனமான பேஸ்புக் ஒரு வாரத்திற்குள் தனது பெயரை மாற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி, மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) நிறுவனத்தின் புதிய பெயரை அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.
அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறும் நிறுவனத்தின் வருடாந்திர மாநாட்டில் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கின் புதிய பெயரை அறிவிக்க உள்ளதாக தங்களுக்கு நேரடி தகவல் கிடைத்துள்ளதாக போர்டல், தி வெர்ஜ் செய்து வெளியிட்டுள்ளது.