WhatsApp-ல் ஒரு நம்பரை block மற்றும் unblock செய்வது எப்படி? படிப்படியான வழிமுறை!

வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவைகளும் வாட்ஸ்அப்பில் உள்ளதால் யூசர் தங்களுக்கு மிகவும் ஒரு வசதியான செயலியாக வாட்ஸ்அப்பை கருதுகின்றனர்.

வாட்ஸ்அப் என்பது உலகில் பலகோடி மக்களால் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு இன்ஸ்டன்ட் மெசேஜ் சர்வீஸ்களில் ஒன்றாக உள்ளது. நண்பர்கள், குடும்பத்தினருடன் யூசர்கள் இணைவதற்கு இந்த சேவை எளிதான ஒன்றாக இருந்து வருகிறது. டைப் செய்து மெசேஜ் அனுப்புவதற்கான வசதி மட்டுமின்றி, வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவைகளும் வாட்ஸ்அப்பில் உள்ளதால் யூசர் தங்களுக்கு மிகவும் ஒரு வசதியான செயலியாக வாட்ஸ்அப்பை கருதுகின்றனர்.
    »
    »
    »
    • WHATSAPP-ல் ஒரு நம்பரை BLOCK மற்றும் UNBLOCK செய்வது எப்படி? படிப்படியான வழிமுறை!

WhatsApp-ல் ஒரு நம்பரை block மற்றும் unblock செய்வது எப்படி? படிப்படியான வழிமுறை!

வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவைகளும் வாட்ஸ்அப்பில் உள்ளதால் யூசர் தங்களுக்கு மிகவும் ஒரு வசதியான செயலியாக வாட்ஸ்அப்பை கருதுகின்றனர்.

வாட்ஸ்அப் என்பது உலகில் பலகோடி மக்களால் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு இன்ஸ்டன்ட் மெசேஜ் சர்வீஸ்களில் ஒன்றாக உள்ளது. நண்பர்கள், குடும்பத்தினருடன் யூசர்கள் இணைவதற்கு இந்த சேவை எளிதான ஒன்றாக இருந்து வருகிறது. டைப் செய்து மெசேஜ் அனுப்புவதற்கான வசதி மட்டுமின்றி, வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவைகளும் வாட்ஸ்அப்பில் உள்ளதால் யூசர் தங்களுக்கு மிகவும் ஒரு வசதியான செயலியாக வாட்ஸ்அப்பை கருதுகின்றனர்.

என்ன தான் எளிமையான செயலில் என்றாலும், சில நேரங்களில் இதில் முன்பின் தெரியாத தொடர்புகளிலிருந்து வரும் மெசேஜ்கள் மற்றும் கால்கள் உள்ளிட்டவை நமக்கு தேவையற்ற தொல்லை மற்றும் தொந்தரவை தருகின்றன. இதை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கூடவே அறிமுகமில்லாத நபர்களின் தொந்தரவு உள்ளிட்ட பல தீமைகளும் இருக்கின்றன. இப்படிப்பட்ட தொல்லைகளில் இருந்து தப்பிக்க வாடிக்கையாளர்களுக்கு, வாட்ஸ்அப் நிறுவனமே செய்து கொடுத்துள்ள ஒரு வழி தான் பிளாக்கிங் கான்டேக்ட்ஸ் (blocking contacts) அம்சம்.

தேவையற்ற கான்டேக்ட்ஸ் மற்று மெசேஜ்களிலிருந்து உங்களை விடுவிப்பதற்கான ஒரு வழி இது. நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பாத கான்டேக்ட்ஸ்களை தடுப்பதே இந்த அம்சத்தின் நோக்கம். நீங்கள் ஒருவரை வாட்ஸ்அப்பில் பிளாக் செய்யும் போது, அவர்களிடமிருந்து மெசேஜ்கள், கால்கள் அல்லது அவர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்களை பெற மாட்டீர்கள். எனவே உங்களுக்கு வாட்ஸ்அப்பில் தொல்லை தரும் ஒரு தொடர்பை நீங்கள் எவ்வாறு பிளாக் செய்யலாம் மற்றும் ஒருவேளை அந்த தொடர்பை நீங்கள் வேண்டும் என்று நினைத்தால் மீண்டும் அதை எவ்வாறு அன்பிளாக் என்பது இங்கே...

வாட்ஸ்அப்பில் ஒரு கான்டேக்ட்டை எவ்வாறு பிளாக் செய்வது?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோனுக்கான WhatsApp-ல் ஒரு கான்டாக்ட்டை பிளாக் செய்வது எப்படி..

* முதலில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்து கொள்ள வேண்டும்

* வாட்ஸ்அப்பில் மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளை டச் செய்யவும்

* கீழ் தோன்றும் மெனுவிலிருந்து செட்டிங்ஸ் (Settings) என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்

* செட்டிங்ஸ் உள்சென்று அக்கவுண்ட் (Account) என்பதை தட்ட வேண்டும்

* பின் தனியுரிமை ( Privacy) விருப்பம் சென்று அதில் பிளாக்ட் கான்டேக்ட்ஸ் (Blocked contacts) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

* மேல் வலது மூலையில் இருக்கும் சேர் விருப்பத்தை (Add option) தட்டவும்

* இறுதியாக அதில் நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் கான்டேக்ட்டை தேர்வு செய்து சேர்க்கவும்

IOS-க்கான வாட்ஸ்அப்பில் ஒருவரை பிளாக் செய்வது?

* ஃபோனில் இருக்கும் வாட்ஸ்அப் ஐகானை தட்டுவதன் மூலம் வாட்ஸ்அப்பை திறக்கவும்.

* உங்கள் திரையின் கீழ் வலது மூலையில் அமைந்துள்ள செட்டிங்ஸ் (Settings) ஐகானைத் தட்டவும்.

* செட்டிங்ஸ் மெனு சென்று அக்கவுண்ட் (Account) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

* அக்கவுண்ட் (Account) மெனுவில், தனியுரிமையை ( Privacy) தட்டி பின் பிளாக்ட் ( Blocked) என்பதை தேர்வு செய்யவும்.

* புதியதைச் சேர் எனப்படும் Tap Add New-வை Tap செய்ய வேண்டும்.

* இப்போது நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் கான்டேக்ட்டை தேர்ந்தெடுத்து தடுக்கவும்.

மாற்று முறை:

நீங்கள் தடுக்க விரும்பும் தொடர்புடன் முன்பே சேட் செய்திருந்தால் அல்லது தெரியாத எண்ணிலிருந்து உங்களுக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தால், தொடர்பின் பெயரை தட்டுவதன் மூலம் அவற்றை நேரடியாக சேட்டில் பிளாக் செய்யலாம். கீழே ஸ்க்ரோலிங் செய்து பின் பிளாக் கான்டேக்ட்டை தட்டவும்.

அன்பிளாக் (unblock) செய்வது எப்படி.?

ஆண்ட்ராய்டில்:

* முதலில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்து கொள்ள வேண்டும்

* வாட்ஸ்அப்பில் மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளை டச் செய்யவும்

* கீழ் தோன்றும் மெனுவிலிருந்து செட்டிங்ஸ் (Settings) என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்

* செட்டிங்ஸ் உள்சென்று அக்கவுண்ட் (Account) என்பதை தட்ட வேண்டும்

* பின் தனியுரிமை ( Privacy) விருப்பம் சென்று அதில் பிளாக்ட் கான்டேக்ட்ஸ் (Blocked contacts) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

* பிளாக் செய்யப்பட்டிருக்கும் கான்டேக்ட்டை தட்டவும்

* பின் அன்பிளாக் செய்யவும்

IOS-ல்:

* ஃபோனில் இருக்கும் வாட்ஸ்அப் ஐகானை தட்டுவதன் மூலம் வாட்ஸ்அப்பை திறக்கவும்.

* உங்கள் திரையின் கீழ் வலது மூலையில் அமைந்துள்ள செட்டிங்ஸ் (Settings) ஐகானைத் தட்டவும்.

* செட்டிங்ஸ் மெனு சென்று அக்கவுண்ட் (Account) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

* அக்கவுண்ட் (Account) மெனுவில், தனியுரிமையை ( Privacy) தட்டி பின் பிளாக்ட் (Blocked) என்பதை தேர்வு செய்யவும்.

* தொடர்பு விவரங்கள் பக்கத்தில் இப்போது தெரியும் அன்பிளாக்ட் கான்டேக்ட்டை(Unblock Contact) தொடுவதன் மூலம், தொடர்புகளை அன்பிளாக் செய்து கொள்ளலாம்.

மாற்று முறை:

நீங்கள் அன்பிளாக் செய்ய விரும்பும் தொடர்பின் முந்தைய சேட்டை ஓபன் செய்து, பின்னர் தொடர்பின் பெயரை தட்டி அன்பிளாக் செய்வதற்கான விருப்பத்தை தேர்வு செய்யலாம்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை