WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – Font அளவை மாற்றுவது எப்படி? முழு விவரம் இதோ!


 உலகின் முன்னணி தகவல் தொடர்பு சாதனமாக திகழும் WhatsApp செயலியில் ஃபாண்ட் அளவை மாற்ற விரும்பும் பயனர்களுக்கு சில எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

ஃபாண்ட் அளவு

WhatsApp என்பது உலகின் மிகப்பெரிய தகவல் பரிமாற்ற செயலியாகும். இந்த செயலியானது உலகம் முழுவதும் உள்ள நபர்களை எளிதாக தொடர்பு கொள்ள உதவுகிறது. இந்த வாட்ஸ்அப்பில் நமக்கு தெரியாத நாம் இதுவரை பயன்படுத்தாத பல அம்சங்கள் உள்ளன. பொதுவாக ஸ்மார்ட்போனை கையாள்வது சில நேரங்களில் சிக்கலானதாக இருக்கலாம். குறிப்பாக சிறிய அல்லது பெரிய எழுத்துருக்களுடன் ஏதாவதொரு செயலியை பயன்படுத்துவது சிக்கல்களை உருவாகக்கூடும்.

ஆனால் ஒரு மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் அமைப்புகளின் எழுத்துரு அளவு (font size) WhatsApp அரட்டை எழுத்துருக்களை மாற்றாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, எழுத்துருக்கள் மிக பெரியதாகவோ அல்லது மிக சிறியதாகவோ இருப்பதை கண்டறிந்து அவற்றை உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்ற விரும்பினால் அதைச் சரிசெய்வதற்கு WhatsApp ஒரு அம்சத்தை கொண்டுள்ளது. இது பயன்படுத்த மிகவும் எளிதானது. இப்போது பயனர்கள் ஸ்மார்ட்போனில் WhatsApp எழுத்துரு அளவை மாற்ற கீழ் காணும் எளிய வழிமுறைகளை பின்பற்றலாம். முதலில் WhatsApp செயலியின் மெனு பொத்தானை தட்டி ‘அமைப்புகள்’ என்பதை தேர்ந்தெடுக்கவும்.

அதாவது வாட்ஸ்அப் முகப்புத் திரையில் மேல் வலது மூலையில் உள்ள 3 செங்குத்து புள்ளிகளை தட்டி, அமைப்புகள் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து ‘அரட்டை அமைப்புகள்’ என்பதை கிளிக் செய்து அரட்டைப் பிரிவில், எழுத்துரு அளவு விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். இப்போது ‘எழுத்துரு அளவு’ என்ற ஆப்ஷனில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய விருப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கும் பாப்அப்பை காண்பீர்கள். அதில் நீங்கள் விரும்பிய எழுத்துரு அளவை அமைத்தவுடன், WhatsApp இல் உரையாடலை திறக்கவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்ததை பொறுத்து உரை அளவு பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை