செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் சேர என்ன செய்ய வேண்டும்? எதையெல்லாம் செய்ய கூடாது? முழு விபரம்!


செல்வ மகள் திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 முதலீடு செய்தால், முதிர்வுத் தொகையாக ரூ.12.70 லட்சம் கிடைக்கும்.

அரசாங்கம் பெண் குழந்தைகளின் முன்னேற்றம், கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் மிகவும் முக்கியமானது சுகன்யா சம்ரிதி யோஜனா என்று கூறப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டமாகும். இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தையின் பெற்றோர்கள் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது மிகப்பெரிய தொகை அவர்களுக்கு கிடைக்கும்.

சுகன்யா சம்ரிதி யோஜனா: முதலீடு மற்றும் சேமிப்பு

சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைக்கான சிறு சேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தை பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாகவும், வருமானம் ஈட்டும் முதலீடு அல்லது பெண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு ஒரு முதலீடாகவும் நீங்கள் கருதலாம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா: தகுதி அளவுகோல்கள் 

இந்த சேமிப்பு திட்டத்தில் சேர்வதற்கு உங்களுக்கு முக்கியமான தகுதிகளில் பெண் குழந்தைக்கு 10 வயது நிரம்பியிருக்கக் கூடாது. அதாவது, குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். ஒரே ஒரு பெண் குழந்தை உள்ள பெற்றோருக்கு மட்டுமே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வரி விலக்கு நன்மைகளும் உண்டு. நீங்கள் மாதம் ரூ. 2500 இந்த திட்டத்தில் சேமித்து வந்தால் முதலீடு முதிர்வடையும் போது ரூ.12,00,000 வரை கிடைக்கும்.



செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை திறப்பது எப்படி

பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாக தபால் அலுவலகம் அல்லது இந்த திட்டம் வழங்கப்படும் வங்கிகளில் கணக்கைத் துவங்கலாம். வங்கி அல்லது தபால் நிலையத்தில் கிடைக்கும் SSA 1 என்ற படிவத்தை நிரப்ப வேண்டும்.

SSA 1 படிவத்தில் குழந்தையின் பெயர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பாதுகாவலர் அல்லது பெற்றோரின் KYC தகவல் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். குழந்தை மற்றும் பெற்றோர்களின் உரிய ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன், நிரப்பிய படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களையும் சரி பார்த்த பின்பு, வங்கி அல்லது தபால்நிலையம் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்யும். அதுமட்டுமின்றி கணக்கிற்கான பாஸ்புக் கிடைக்கும்.

செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டத்துக்கு தேவையான ஆவணங்கள்

* குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்

* பெற்றோர் அல்லது பாதுகாவலரின் முகவரி சான்றுக்கு பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பயன்பாட்டு பில் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று

* பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாளச் சான்றுக்கு பான், வாக்காளர் அட்டை, ஆதார் அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று

* குறைந்தபட்சம் ரூ. 250 அல்லது நீங்கள் விரும்பும் தொகைக்கு காசோலை அல்லது வரைவோலை

நிலையான வருமானம் பெறும் முதலீடுகளில், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் அதிக லாபம் ஈட்டும் திட்டங்களில் ஒன்றாகும். 15 ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 முதலீடு செய்தால், முதிர்வுத் தொகையாக ரூ.12.70 லட்சம் கிடைக்கும்






Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்