WhatsApp பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மெசேஜ்களை ஃபார்வேட் செய்வதற்கு இனி புதிய கட்டுப்பாடுகள்!

 

தற்போது வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேட் செய்யப்படும் செய்திகளை எத்தனை முறை அனுப்பலாம் என்ற வரம்பை நிர்ணயித்து, பயனர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வாட்ஸ்அப் மெசேஜ்

உலகளவில் பல பில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் முன்னணி தகவல் தொடர்பு சாதனமான வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு ஏகப்பட்ட அம்சங்களை வழங்குகிறது. அந்த வகையில் இதுவரை குரல் அழைப்பு, வீடியோ அழைப்பு, பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் வாட்ஸ்அப் நிறுவனம், இப்போது புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த அம்சம் மூலம், வாட்ஸ்அப் செயலியில் தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை பரப்புவது கட்டுப்படுத்தப்படும்.

இப்போது மெட்டாவுக்கு சொந்தமான இயங்குதளமான வாட்ஸ்அப், ஒரு செய்தியை எத்தனை முறை பார்வேட் செய்யலாம் என்ற வரம்பை கொண்டுள்ளது. இனி எதிர்காலத்தில் இந்த அம்சத்தை வாட்ஸ்அப் இறுக்கமாக பயன்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மாற்றம் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள WABetainfo, ‘WhatsApp தொடர்பான புதுப்பிப்புகள் நம்பகமான ஆதாரமாக மாறியுள்ளது. இப்போது பார்வேட் செய்திகளை ஒரு குரூப்பிற்கு மட்டுமே அனுப்ப முடியும்’ என்று தெரிவித்துள்ளது.

அந்த வகையில், ஒரு நபர் ஒரே செய்தியை வாட்ஸ்அப்பில் உள்ள பல குழுக்களுக்கு அனுப்ப முயற்சிக்கும் போதெல்லாம் இந்த எச்சரிக்கை தோன்றும் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது, வாட்ஸ்அப் பயனர்கள் ஒரு வைரல் ஃபார்வேர்ட் செய்தியை ஒரு குழுவுக்கு மட்டுமே பகிர முடியும். அதன் பிறகு, மற்றவர்கள் அனுப்பும் செய்தியின் வரம்பு குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படும். இந்த புதிய மாற்றம் சமூக ஊடகங்களில் வைரலாகும் சில செய்திகளின் வரம்பை கட்டுப்படுத்த WhatsApp தன்னால் இயன்றவரை முயற்சிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் வாட்ஸ்அப், செய்திகளை அனுப்பும் செயல்முறையை கடினமானதாக மாற்ற விரும்புகிறது. மேலும், மக்கள் செய்திகளை அனுப்புவதற்கு முன்பாக அதனை மறுபரிசீலனை செய்யும்படி கட்டாயப்படுத்துகிறது. இது பல வழிகளில் செய்திகளின் பரவலை கட்டுப்படுத்தலாம். இப்போது இந்த அம்சத்தின் வெளியீடு பீட்டா பதிப்பில் இருப்பதால், இறுதி தயாரிப்பு எப்போது வேண்டுமானாலும் பொதுமக்களுக்கு வரும் என்பது தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை