தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – விநியோகம் தொடக்கம்!

 


தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது ஏடிஎம் அட்டை போல ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து வேலூர் தாலுகாவில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு

தமிழகத்தில் அனைத்து குடும்பத்தினரும் ரேஷன் கார்டு மூலமாக உணவு பொருட்களை மலிவான விலையில் ரேஷன் கடைகளில் பெற்று வருகின்றனர். அத்துடன் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. அதனால் அனைத்து குடும்பத்தினரும் ரேஷன் கார்டு வைத்திருப்பது அவசியமானதாகும். அதன் காரணமாக தமிழகத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து ரேஷன் கார்டுக்கும் டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்க முடியும். மேலும் தற்போது தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்ய ஆதார் அட்டை கொண்டு செல்ல வேண்டும். இத்திட்டத்தின் படி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ‘பாயின்ட் ஆப் சேல்’என்ற இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் ‘ஸ்கேன்’ செய்து தொலைபேசி எண் போன்ற விபரங்களை ரேஷன் கடை ஊழியர்கள் பெற்று கொள்ளவர்கள். அத்துடன் இந்த விவரங்கள் உணவுத் துறை அலுவலகத்திலும் பதிவு செய்யப்படும்.

அதன்பின் விவரங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு இந்த விவரங்கள் உள்ளடங்கிய ‘சிப்’ பொருந்திய ஸ்மார்ட் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் கார்டை ‘ஸ்வைப்’ செய்து ரேஷன் பொருட்களைப் பெற முடியும். தற்போது தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களில் 1,357 ஸ்மார்ட் கார்டுகள் தாலுகா அலுவலகத்தில் இயங்கும் வட்ட வழங்கல் அலுவகத்திற்கு வந்தடைந்துள்ளன. இதனை பயனாளர்களுக்கு வேலூர் குடிமைப்பொருள் தாசில்தார் சத்தியமூர்த்தி அவர்கள் வழங்கினார்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை