TNPSC குரூப் 2, 2A தேர்வு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – புதிய அறிவிப்பு வெளியீடு!

 

தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2A தேர்வு வரும் மே21ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் குரூப் 2, 2A தேர்வுக்கு பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் விண்ணப்பிக்கும்போது விவரங்களை தவறாக உள்ளீட்டு செய்தவர்கள் அதை திருத்தம் செய்து கொள்ள TNPSC வாய்ப்பு வழங்கியுள்ளது.

தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்யபடுகிறார்கள். மேலும் கொரோனா எதிரொலியாக கடந்த 2 வருடங்களாக எந்த ஒரு போட்டி தேர்வும் நடக்கவில்லை. இந்நிலையில் பல தடுப்பு விதிமுறைகள் மூலம் தற்போது நிலைமை சீராகி வருவதால் மீண்டும் போட்டி தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக குரூப் 2, குரூப் 2A தேர்வு அறிவிப்புக்காக காத்திருந்த பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கடந்த மாதம் 18ம் தேதி TNPSC தலைவர் குரூப் 2, குரூப் 2A தேர்வு அறிக்கையை வெளியிட்டார். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது உள்ளது.

மேலும் குரூப் 4 தேர்வு அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாகும் என தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும் TNPSC ஒரு முறை நிரந்தரப் பதிவு ( OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்கள் தங்களது ஆதார் குறித்த விவரங்களை இணையதளத்தில் ஏப்ரல் 30ம் தேதி தேதி இணைக்க வேண்டும் என்று TNPSC அறிவித்துள்ளது . இந்நிலையில் குரூப் 2, 2A தேர்வுக்கு தேர்வர்கள் பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி இம் மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எனவே குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் 23ம் தேதிக்குள் ஆதாரை ஒரு முறை நிரந்தரப் பதிவு உடன் இணைக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களில் பலர் விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த பிறகு, சில தகவல்களை தவறாக பதிவு செய்து விட்டதாகவும், அந்த தவறுகளை திருத்த TNPSC அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தேர்வர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக மார்ச் 14ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதிவரை ஒரு முறை நிரந்தரப் பதிவு ( OTR) மூலம் விண்ணப்பதாரர்களே விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். இது குறித்து கூடுதல் விவரங்களை  18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று TNPSC தெரிவித்து உள்ளது.



Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்