இந்தியாஆதாரில் முகவரியை மாற்றினால் டிஜிலாக்கர் ஆவணங்களில் தானாக புதுப்பிக்கும் வசதி

 

புதுதில்லி: பயனாளரின் ஆதார் அட்டையில் இருக்கும் முகவரியைத் திருத்தியவுடன், டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரியைத் தானாகப் புதுப்பிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது, பயனாளரின் ஆதாரில் முகவரியைத் திருத்தியவுடன், அவரது பான் அட்டை போன்ற பிற ஆவணங்களில் உள்ள முகவரியும் தானாக புதுப்பிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

டிஜிலாக்கரில் உரிமம் பெற்றவர்கள், ஆதாரில் புதிய முகவரியைப் மாற்றியவுடன் சரிபார்ப்பு மூலம் மற்ற ஆவணங்களில் முகவரியைப் புதுப்பித்துக் கொள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதிக்கிறது.

இவ்வாறு சேமிக்கும் பயனாளர்கள் தங்கள் முகவரியைப் புதுப்பிக்க ஒவ்வொரு ஆவணத்துக்கும் ஒவ்வொரு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய தேவையை நீக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


டிஜிலாக்கரில் ஒரு கோப்பின் அளவு அதிகபட்சமாக 10 எம்பி வரையில் இருக்கலாம். மேலும் பிடிஎப், ஜேபிஜி, பிஎன்ஜி போன்ற கோப்பு வடிவங்களில் ஆவணங்களைப் பதிவேற்றலாம்.

தற்போதைய நிலவரப்படி, உங்கள் வாகனப் பதிவு ஆவணங்கள், பான் அட்டை, காப்பீட்டு அட்டை, பல்கலைக்கழக மற்றும் பள்ளி கல்வித்துறை சான்றிதழ்கள் மற்றும்  மருத்துவ காப்பீட்டு அட்டை உள்பட பல ஆவணங்களை டிஜிலாக்கரில் சேமிக்கலாம் 



கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை