வாழைப்பூ துவையல்

 பல சத்துக்களைக் கொண்டது இந்த வாழைப்பூ துவையல். இரத்த விருத்தியை அளிக்கக் கூடியது. உடலில் ஏற்படும் பல தொந்தரவுகளுக்கு சிறந்தது. இட்லி, தோசை போன்றவற்றுடன் உண்ண சிறந்தது.

தேவையான பொருட்கள்

  • 1 கப் வாழைப்பூ
  • 5 வர மிளகாய்
  • 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 துண்டு பெருங்காயம்

  • உப்பு
  • சிறிது சுட்ட புளி
  • சிறிது மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் நல்லெண்ணெய்

செய்முறை

  • வாழைப்பூவை சுத்தம் செய்து ஒவ்வொரு பூக்களிலும் இருக்கும் நரம்பு பகுதியையும் சிறிதாக இருக்கும் தெளிவாகத் தெரிகின்ற தோல் பகுதியையும் ஆய்ந்து சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • நறுக்கியவற்றை நிறம் மாறாமல் இருக்க நீரில் போடாவேண்டும். (வேண்டுமானால் சிறிது மோர் சேர்த்துக் கொள்ளலாம்).

  • அனைத்தையும் நறுக்கிய பின், நறுக்கிய பூக்களை நீரிலிருந்து எடுத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து உளுந்து, பெருங்காயம், வர மிளகாய் சேர்த்து உளுந்து பொன்னிறமாக வறுபட்ட பின் அதனுடன் வேக வைத்த வாழைப்பூவை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

  • வாழைப்பூ நன்கு வதங்கிய பின் அதனுடன் சுட்ட புளி, உப்பு சேர்க்கவும்.
  • இவற்றை ஆறவிடவும்
  • ஆறியதும் அனைத்தையும் நன்கு அரைக்கவும்.
  • அவ்வளவுதான் சத்தான சுவையான வாழைப்பூ துவையல் தயார்.
  • வாழைப்பூ துவையல்

    பல சத்துக்களைக் கொண்டது இந்த வாழைப்பூ துவையல். இரத்த விருத்தியை அளிக்கக் கூடியது. உடலில் ஏற்படும் பல தொந்தரவுகளுக்கு சிறந்தது. இட்லி, தோசை போன்றவற்றுடன் உண்ண சிறந்தது.
     Side Dish
     Indian
     thuvaiyal recipe in tamil
     ஆயத்த நேரம் : –15 minutes
     சமைக்கும் நேரம் : –10 minutes
     மொத்த நேரம் : –25 minutes

    தேவையான பொருட்கள்

    • 1 கப் வாழைப்பூ
    • 5 வர மிளகாய்
    • 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
    • 1 துண்டு பெருங்காயம்
    • உப்பு
    • சிறிது சுட்ட புளி
    • சிறிது மஞ்சள் தூள்
    • 2 ஸ்பூன் நல்லெண்ணெய்

    செய்முறை

    • வாழைப்பூவை சுத்தம் செய்து ஒவ்வொரு பூக்களிலும் இருக்கும் நரம்பு பகுதியையும் சிறிதாக இருக்கும் தெளிவாகத் தெரிகின்ற தோல் பகுதியையும் ஆய்ந்து சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
    • நறுக்கியவற்றை நிறம் மாறாமல் இருக்க நீரில் போடாவேண்டும். (வேண்டுமானால் சிறிது மோர் சேர்த்துக் கொள்ளலாம்).
    • அனைத்தையும் நறுக்கிய பின், நறுக்கிய பூக்களை நீரிலிருந்து எடுத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
    • பின் ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து உளுந்து, பெருங்காயம், வர மிளகாய் சேர்த்து உளுந்து பொன்னிறமாக வறுபட்ட பின் அதனுடன் வேக வைத்த வாழைப்பூவை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
    • வாழைப்பூ நன்கு வதங்கிய பின் அதனுடன் சுட்ட புளி, உப்பு சேர்க்கவும்.
    • இவற்றை ஆறவிடவும்
    • ஆறியதும் அனைத்தையும் நன்கு அரைக்கவும்.
    • அவ்வளவுதான் சத்தான சுவையான வாழைப்பூ துவையல் தயார்.

Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்