வேப்பம்பூ துவையல்

 veppam poo, neem leaves, neem leaves thuvaiyal, chutney, veppam poo chutney, healthy chutney, fertility food, health n organics tamil

சுவையான ஆரோக்கியமான வேப்பம்பூ துவையல் (Neem Flower Recipe, Veppam Poo Thuvaiyal) மாதவிடாய் கோளாறுகளை போக்கவல்லது. உடலில் இருக்கும் தீங்கு செய்யும் கிருமிகள், பூச்சிகளை அழிக்கவல்லது. குழந்தைப்பேறு அளிக்கும் அற்புத உணவு. வேப்ப மரத்தின் அனைத்து பாகமும் மருத்துவ பயன்கொண்டது. இந்த வேப்பம் பூவை புதிதாக பயன்படுத்துவதை விட அதனை காய வைத்து பயன்படுத்துவது சிறந்தது. அதிலும் நல்லெண்ணெய் அல்லது பசு நெய்யுடன் சேர்த்து இந்த வேப்பம் பூவை வறுத்து பயன்படுத்துவதால் வேப்பம் பூவின் மருத்துவ குணம் அதிகரிக்கும். வேப்பம் பூவை குடிநீர் செய்து தினமும் பருகி வர உடல் பலக்குறைவு நீங்கும். வேப்பம் பூ ரசம் வயிற்று வலி, அஜீரணம் தீரும்.

தேவையான பொருட்கள்

  • வேப்பம் பூ – ஒரு கை பிடி
  • நெல்லிக்காய் அளவு சுட்ட புளி
  • 4 வரமிளகாய்
  • 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
  • சிறிது பெருங்காயம்
  • தேவையான அளவு உப்பு
  • 2 ஸ்பூன் நல்லெண்ணை

செய்முறை

  • வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து வேப்பம் பூ, புளி, வர மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.
  • அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்துகொள்ளவும்.
  • தேவைபட்டால் இதனுடன் கடுகு, உளுந்து, வரமிளகாய் தாளித்து சேர்த்துக் கொள்ளலாம்.
  • சுவையான ஆரோக்கியமான வேப்பம்பூ துவையல் தயார். இதை சுடுசாதம் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
  • வேப்பம்பூ துவையல்

    சுவையான ஆரோக்கியமான வேப்பம்பூ துவையல் மாதவிடாய் கோளாறுகளை போக்கவல்லது. உடலில் இருக்கும் தீங்கு செய்யும் கிருமிகள், பூச்சிகளை அழிக்கவல்லது. குழந்தைபேரினை அளிக்கும் அற்புத உணவு.
     Breakfast
     Indian
     chutney recipe, neem flower recipe in tamil, thuvaiyal recipe in tamil
     ஆயத்த நேரம் : –10 minutes
     சமைக்கும் நேரம் : –10 minutes
     மொத்த நேரம் : –20 minutes
     பரிமாறும் அளவு : –2

    தேவையான பொருட்கள்

    • வேப்பம்பூ
    • நெல்லிக்காய் அளவு புளி
    • 4 வரமிளகாய்
    • 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
    • சிறிது பெருங்காயம்
    • தேவையான அளவு உப்பு
    • ஸ்பூன் நல்லெண்ணை

    செய்முறை

    • வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து வேப்பம்பூ, புளி, வர மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.
    • அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்துகொள்ளவும்.
    • தேவைபட்டால் இதனுடன் கடுகு, உளுந்து, வரமிளகாய் தாளித்து சேர்த்துக் கொள்ளலாம்.
    • சுவையான ஆரோக்கியமான வேப்பம்பூ துவையல் தயார். இதை சுடுசாதம் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்