தமிழகத்தில் நடுத்தர, ஏழை மக்களுக்கான உணவுப்பொருட்கள், சலுகைகள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை ஸ்மார்ட் கார்டு என்பது மிக மிக முக்கியமான ஆவணம். அனைத்து சலுகைகளும் பெற ஸ்மார்ட் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். இப்போது ஸ்மார்ட் கார்டாக அதன் வடிவம் மாறிவிட்டது. இதன் மூலம் கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை குறைந்த விலைக்கு பெறமுடியும்.
தமிழக அரசின் உணவு வழங்கல் துறை சார்பில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கபடுகின்றன. இதற்க்கு ‘www.tnpds.gov.in’ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை பரிசீலித்து, உணவு வழங்கல் உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் அளிப்பர். அச்சிடப்பட்ட கார்டு சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி, பயனாளிகளிடம் ஒப்படைக்கபடுகின்றது.
புதிய ரேஷன் கார்டை அலுவலகத்தில் பெறுவதில் சிக்கல் இருந்து வருவதாக பலர் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் அச்சிடப்பட்ட புதிய ரேஷன் கார்டை பயனாளிகளின் வீடுகளுக்கு அஞ்சலில் அனுப்ப தமிழக அரசு முடிவுசெய்யப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த அரசிடம் உணவு வழங்கல்த்துறை அனுமதி கேட்டது. அதை பரிசீலித்து அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டது.
அதன்படி புதிய ஸ்மார்ட் கார்டை ஆன்லைன்னில் விண்ணப்பம் செய்யும் போதே அஞ்சலில் அனுப்பும் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே அஞ்சல் மூலம் புதிய ரேஷன் கார்டு உங்கள் வீடுத்தேடி வரும். அஞ்சலில் ரேஷன் கார்டை பெற விரும்புவோர் அஞ்சல் கட்டணமாக 25 ரூபாயை இணையத்தளம் வாயிலாகவே செலுத்த வேண்டும். நகல் கார்டுக்கு 20 ரூபாய் கட்டணமும், அஞ்சல் கட்டணத்திற்கு ரூபாய் என மொத்தம் 45 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்திய பிறகு, உங்களுக்கு Reference Number கிடைக்கும். அதை வைத்து உங்கள் ஸ்மார்ட் கார்டு அச்சிடப்பட்டு விட்டதா, பதிவு தபால் செய்யப்பட்டதா, பதிவு தபாலில் அனுப்பப்பட்டது எனில் அதன் பதிவு செய்யப்பட பதிவு எண் கிடைக்கும் அதன் மூலம் உங்கள் ரேஷன் கார்டு எந்த அஞ்சல் அலுவலத்தில் உள்ளது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம் என்பது அனைவருக்கும் பயன்னுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அனைத்து நடவடிக்கைகளும் உடனுக்குடன் உங்களுக்கு ரேஷன் கார்டுடன் இனைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்க்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதன்மூலம் எளிமையாக நீங்கள் விண்ணப்பத்தின் நிலையே பார்க்கமுடியும்.