கிராம வறுமை ஒழிப்பு சங்கம் என்பது இலக்கு மக்களுக்கு உதவி செய்யும் ஒரு சுயசார்பு மக்கள் அமைப்பாகும். கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் பெரும்பான்மையோர் இலக்கு மக்களாக இருக்க வேண்டும். கிராம வறுமை ஒழிப்பு சங்கம், புதுவாழ்வு திட்டத்தை செயல்படுத்துவதில் கிராம சபைக்கும், ஊர் கூட்டத்திற்கும் பொறுப்புடையதாக இருக்கும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்க சிறப்பு நிதி
கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியில் மூன்று தவணை நிதியிலிருந்து மொத்தமாக 40 விழுக்காடு நிதி, சிறப்பு நிதியாக மாற்றுத் திறனாளி மற்றும் நலிவுற்றோரின் மேம்பாட்டிற்காக செலவு செய்யலாம். இச்சதவீதம் ஊராட்சிக்கு ஊராட்சி மாற்றுத் திறனாளி எண்ணிக்கைக்கேற்ப மாறுபடும். இது முக்கியமாக, அவர்களின் திறன் வளர்ப்பு, சிறப்பு மறுவாழ்வு தேவைகள் மற்றும் நலிவுற்றோர்களின் நலன்களுக்காக பயன்படுத்தலாம். சிறப்பு நிதி ஒதுக்கீடு சதவிகிதத்தை குறைப்பது மற்றும் உயர்த்துவது கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்க சிறப்பு நிதியின் முக்கிய விதிகள்
இந்த நிதியின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி மானியமாக / கடனாக இருக்கும்.
கடனை திரும்ப செலுத்த இயலாத தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியுடைய மிகவும் ஏழை மாற்றுத் திறனாளி / மிகவும் நலிவுற்றவருக்கு மானியத்தினை அளிப்பதற்கு கிராம சபை / ஊர்க்கூட்டம் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே அளிக்க வேண்டும் (ஒரு ஊராட்சிக்கு 10 முதல் 20 நபர்கள் வரை வழங்கலாம் )
மானிய உதவியானது மருத்துவ உதவி தேவை உள்ளோர், கருவிகள் மற்றும் உதவிகள், கல்வி உதவி மற்றும் பிற மறுவாழ்வு பணிகளுக்கு உதவிகள் தேவைப்படுவோருக்கு அளிக்கப்படும்.
சிறப்பு நிதி குறித்த விதிகள்
மற்றும் நடைமுறைகளுக்கு, 70% இலக்கு மக்கள் பங்கேற்கும் கிராம சபை ஒப்புதல் அளிக்கும். இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் யாருக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்பதை அதன் தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யும்.
ஆதார நிதி சிறப்பு குழுக்களுக்கு மானியமாக வழங்கப்படும்.
சிறப்பு நிதியில் செய்யக்கூடிய தகுதியான நடவடிக்கைகள்
மாற்றுத் திறனாளி மற்றும் நலிவுற்றோர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியிருப்பதால், பிற மக்களை போல் சேமித்து குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கி இணைப்பு மற்றும் தொழில் துவங்க முடியாமல் பின்னடைந்து விடுகின்றனர். ஆகையால், சிறப்பு குழுக்களின் செயல்பாட்டினை துரிதப்படுத்தவும், பிற குழுக்களுக்கு ஈடாக நடைமுறைக்கு கொண்டு வரவும் குழு தொடங்கிய 3 மாத காலத்திற்கு பின் ஒவ்வொரு குழுவிற்கும் ரூ. 10000 முதல் ரூ. 20000 வரை ஆதார நிதியாக வழங்கலாம்.
கண்டறியப்பட்ட சிறப்பு தேவைகளின் அடிப்படையில், கிராம வறுமை ஒழிப்பு சங்க திட்டத்தின் ஒரு பகுதியாக, மாற்றுத் திறனாளி மற்றும் நலிவுற்றோருக்கான திட்டத்தினை உருவாக்குவதற்கு
மறுவாழ்வு தேவை மதிப்பீட்டு முகாம்களை நடத்துவதற்கு
தீவிரமாக பாதிப்புக்குள்ளான மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வு, சிகிச்சை மற்றும் திறன் வளர்ப்பிற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக
தகுதியான ஒவ்வொரு சிறப்பு குழுவிற்கும் ஆதார நிதி வழங்குவதற்கு
மாற்றுத் திறனாளி மற்றும் நலிவுற்றோருக்கான குழுவிற்கோ அல்லது தனி நபருக்கோ வாழ்வாதார செயல்பாடுகள் ஏற்படுத்துவதற்காக
தகுதியான தனி நபர்களுக்கு வாழ்வாதார உதவிகள் அல்லது குழுவில் இன்னும் இணையாத தீவிரமாக பாதிப்புக்குள்ளான மாற்றுத் திறனாளிகளின், தீவிரமான மனநல குறைவுடையோர் ஆகியோருக்கு கவனிப்பு அளிக்க
நலிவுற்ற தன்மையை குறைக்கும் பிற செயல்கள் / திட்டங்களுக்காக
மருத்துவ சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை பெறுவதற்கான செலவுகளை மேற்கொள்ள
எய்ட்ஸ் மற்றும் பிற தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சையினை அரசு மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கான செலவுகள்
ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்கான செலவுகளை மேற்கொள்ள
கிராம மாற்றுத் திறனாளி ஊக்குநரின் மறுவாழ்வு பயிற்சிக்கான செலவுகள்
மாற்றுத் திறனாளிகள், அரவாணிகள், முதியோர்கள் மற்றும் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு சிறு முதலீட்டில் தொழில் துவங்க ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை உதவி செய்யலாம். இந்த தொகையினை வட்டியில்லாத கடனாகவோ அல்லது மானியமாகவோ கொடுக்க கிராம வறுமை ஒழிப்பு சங்கம் முடிவு செய்யலாம். (மானியத்தினை அளிப்பதற்கு கிராம சபை / ஊர்க்கூட்டம் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே அளிக்க வேண்டும். ஒரு ஊராட்சிக்கு 10 முதல் 20 உறுப்பினர்கள் வரை வழங்கலாம்)
ஏழை, மிகவும் ஏழை குடும்பத்திலுள்ள கடும் பாதிப்புக்குள்ளான மாற்றுத் திறனாளிகளுக்கு வேறு எந்த உதவியினாலும் பயனடைய முடியாத பட்சத்தில் அவர்களின் பெற்றோர் / பாதுகாவலருக்கு சிறு தொழில் செய்ய நாம் கடனுதவி அளிக்கலாம்.
இதைத் தவிர வேறு எதாவது செலவுகள் மாற்றுத் திறனாளி மற்றும் நலிவுற்றோரின் வளர்ச்சிக்காக தேவைப்படின், சிறப்பு நிதியின் அளவிற்கு ஏற்ப அவர்களுடன் கலந்து பேசி மேற்கொள்ளலாம்.
சிறப்பு நிதியினைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள்
தொழில் துவங்குவதற்கு இந்நிதியிலிருந்து கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் நலிவுற்றோர் ஆகியோருக்கு இரண்டு வழிகளில் உதவி செய்யலாம்.
கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் நலிவுற்றோர் ஆகியோரால் கடன் திரும்ப செலுத்த முடியாதவர்கள் தொழில் துவங்குவதற்கு திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிதி உதவியை ஒரு தவணையில் மானியமாக வழங்கலாம். அந்த நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும் மற்றும் பட்டியலை கிராமத்திலுள்ள நபர்கள் எல்லோரும் ஒப்புக் கொள்வதோடு கிராம சபையிலும் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் நலிவுற்றோரில் கடன் திரும்ப செலுத்த முடிந்தவர்களுக்கு திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிதி உதவியை வட்டி இல்லாத கடனாக வழங்கலாம். இந்த சிறு கடனை திரும்ப செலுத்துதல் மற்றும் வட்டி விவரம் முன்னதாக தெரியப்படுத்த வேண்டும். இந்த கடனை கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கண்காணிக்கும். கடன் திரும்ப செலுத்துவதை கிராம வறுமை ஒழிப்பு சங்க வளர்ச்சி நிதி கணக்கிற்கு கொண்டு செல்லலாம். இதனால் மேலும் பல இலக்கு மக்கள் முன்னேற கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உதவி செய்ய முடியும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்க இளைஞர் மேம்பாட்டு நிதி
திறன் வளர்ப்பு நிதி
புதுவாழ்வு திட்டம் இளைஞர்களின் மேம்பாடு மூலமாக சமூக வளர்ச்சிக்கு உதவுகிறது. அதாவது கிராமத்திலுள்ள இளைஞர்களின் திறனை நிறுவனமயமாக்கி அவர்களின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகளுக்கு போதுமான நிதியளிப்பதன் வாயிலாக மேம்படுத்துகிறது. கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியின் மூன்று தவணை நிதியிலிருந்து மொத்தமாக 20% விழுக்காடு நிதி இளைஞர்கள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
18 முதல் 35 வயது வரை உள்ள அனைவரும் இளைஞர்களாக கருதப்படுவார்கள் இந்த நிதியின் முக்கியமான நோக்கமானது
இளைஞர்களின் திறன்களை வளர்ச்சி போக்கில் திருப்புவது
வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவி செய்து, அவர்கள் தங்களின் மரபு சார்ந்த திறன்களை மேம்படுத்தவோ அல்லது அவர்களின் சுய வேலை வாய்ப்பிற்கு வழிவகுக்கவோ அல்லது வருவாய் ஈட்டக் கூடிய பிற தொழில்கள் மேற்கொள்ள சிறப்பு திறன்களை வளர்க்கவோ உதவுவது
இளைஞர் சுய உதவி குழுக்களை உருவாக்குவது மற்றும் வலுப்படுத்துவது
இளைஞர் அமைப்பு - விளக்கம்
கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் இளைஞர்கள் இரு வகை அமைப்பாக (அதாவது ஆண்கள் அமைப்பு மற்றும் பெண்கள் அமைப்பு) செயல்படுவர்.
ஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்பு சங்கமும், இலக்கு மக்களில் இருந்து இரண்டு இளைஞர் பிரநிதிகளை (1 ஆண், 1 பெண்) அதன் உறுப்பினராகக் கொண்டிருக்கும். இதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு 5 உறுப்பினர்களை கொண்ட “ இளைஞர் துணைக் குழு” உறுதுணை செய்யும்.
இளைஞர் அமைப்புகளிலிருந்து “இளைஞர் துணைக் குழு”விற்கு குறைந்தது மூன்று உறுப்பினர்களை இலக்கு மக்கள் பிரிவிலிருந்து தங்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டும். (அனைத்து இளைஞர் குழுவிற்கும், உறுப்பினர்களின் வயது 18 முதல் 35 வரை இருக்கும்)
இளைஞர் மேம்பாட்டு நிதியின் - திறன் வளர்ப்பு நிதி
திறன் வளர்ப்பு நிதியின் கீழ் செய்யக் கூடிய உதவி எளிதில் திரும்ப செலுத்தக் கூடிய கடனாக அல்லது பயனாளிகளின் பங்களிப்புடன் கூடிய மானியமாக தனி நபர்களுக்கு வழங்கலாம்.
மானிய உதவிகள் இளைஞர் மேம்பாட்டு செயல்பாடுகளுக்காகவும், சமூக மேம்பாட்டு செயல்பாடுகள் சிலவற்றிற்காகவும் வழங்கப்படும். இளைஞர் மேம்பாட்டு செயல்பாடுகளுக்காக மக்கள் பங்களிப்பு பெறப்படுகின்றன.
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மானிய உதவிகளை வழங்கும் போது மக்கள் பங்களிப்பாக செலுத்த வேண்டிய தொகையை குறித்து கிராம சபையில் முடிவு செய்யலாம்.
புதுவாழ்வு திட்டம் செயல்படும் ஊராட்சிகளில் மட்டும் மகளிர் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வழங்க நிதி போதாத போது கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியில் ஒதுக்கப்பட்ட 20 சதவிகித இளைஞர் மேம்பாட்டு நிதியை திறன் வளர்ப்பு பயிற்சிக்கு பயன்படுத்தலாம்
இளைஞர் மேம்பாட்டு செயல்பாடுகளுக்கான நிதியில் செய்யக்கூடிய தகுதியான பிற நடவடிக்கைகள்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொடர்பான தேவையான புள்ளி விவரங்கள் உருவாக்குவது மற்றும் தொடர்ந்து சேகரிப்பது.
இளைஞர் குழுக்களை உருவாக்குவது மற்றும் பலப்படுத்துவது (திறன் வளர்ப்பு நிதி உதவியோடு).
தர மதிப்பீட்டில் தகுதி பெற்ற இளைஞர் குழுக்களுக்கு ஆதார நிதி வழங்குவது. சமூக தர மதிப்பீடு அடிப்படையில் குழு தொடங்கி 4 மாதத்திற்கு பிறகு ரூ. 10000 முதல் 20000 வரை வழங்குவது.
ஊராட்சியிலுள்ள இளைஞர்களுக்கு தகுந்த திறன்கள் மற்றும் தொழில்களைக் கண்டறிதல்.
இளைஞர்களின் திறமைகள் வெளிப்பட, உகந்த சூழலை உருவாக்குவது.
கிராமத்தின் தேவைகளான கற்றல் மையம், நூலகம், விளையாட்டு மையம், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் போன்ற இளைஞர் செயல்பாடுகளுக்கு பொருத்தமான வகையில் நிறுவனங்களை அமைப்பது.
கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியினை பயன்படுத்தும் முறை
கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் மட்டுமே வரவுகள் மற்றும் செலவுகள் மேற்கொள்ள வேண்டும். நிதி பெற்ற பிறகு அதனை பயன்படுத்த துணைத் திட்டம் தயாரித்த பிறகு பயன்படுத்த வேண்டும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் திட்டத்திற்கு புறம்பான செயல்களுக்காக வறுமை ஒழிப்பு சங்க நிதியில் எந்த செலவினங்களும் செய்யக் கூடாது.
கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி பயன்பாடுகள் அனைத்தும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தால் முடிவு செய்யப்பட வேண்டும்.
திட்ட பணியாளர்கள் வறுமை ஒழிப்பு சங்கத்தின் பெயரால் ரொக்கம் மற்றும் காசோலைகளை பெறுவதற்கும் கொடுப்பதற்கும் அனுமதி கிடையாது.
ஒவ்வொரு தவணை நிதியினை பெற்ற விபரம், மாதாந்திர செலவின அறிக்கை போன்றவற்றை தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
வங்கிக் கணக்கினை செயலாளர் மற்றும் பொருளாளர் இணைந்து செயல்படுத்த வேண்டும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கம், வங்கியிலிருந்து அதிக பணத்தை எடுக்கக் கூடாது. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் மட்டுமே தேவைக்கேற்ப பணத்தை எடுத்து அதற்கான செலவுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
தவறுதலாக அதிகத் தொகை எடுக்கும் பட்சத்தில் செலவு மேற்கொண்ட பின் கையிருப்பாக உள்ள மீதித் தொகையை வங்கி கணக்கில் உடனடியாக செலுத்தி அதற்கும் தீர்மானம் இயற்றப்பட வேண்டும்.
பெறுபவர் பெயரில் / நிறுவன பெயரில் மட்டுமே குறுக்கு கோடிட்ட (crossed) காசோலைகளை வழங்க வேண்டும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்க செலவினங்களுக்காக பணம் எடுக்க காசோலைகளை (cheque) மட்டுமே பயன்படுத்த வேண்டும். பணம் எடுக்கும் படிவத்தை (withdrawal slip) பயன்படுத்தக் கூடாது.
இலக்கு மக்கள் பட்டியிலில் உள்ள குடும்பங்களை முன்னுரிமைப்படுத்தி அதனடிப்படையில் நிதி பயன்பாட்டினை இலக்கு மக்களுக்கு வழங்க வேண்டும்.
காசோலையில் “தீர்மான நகல் இருப்பின் பணம் வழங்கவும்” (“To be paid only if accompanied by resolution of VPRCs”) என்ற முத்திரை பதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒரு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திலிருந்து வேறு ஒரு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு நிதியை மாற்றக் கூடாது.
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் துணைத் திட்டம் தயாரிக்க திட்ட ஒருங்கிணைப்பு அணி வழிகாட்ட வேண்டும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தயாரிக்கப்பட்ட துணைத் திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே செலவினங்களை மேற்கொள்ள வேண்டும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் திட்ட வழிகாட்டியில் உள்ள சமுதாய கொள்முதல் விதிகளின் படியே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கொள்முதல் செய்வதற்கு முன்பு விலைப்பட்டியல்களை பெற்று உறுப்பினர்கள் முன்னிலையில் அட்டவணையிட்டு ஒப்பீடு செய்வதை திட்ட ஒருங்கிணைப்பு அணி உறுதி செய்ய வேண்டும்.
உறுப்பினர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும் விலைப்பட்டியல்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விலைப்பட்டியலிலும் கூட்டத்தில் பங்குபெற்ற நிதி மற்றும் கொள்முதல் குழு உறுப்பினர்கள் கையொப்பம் இட வேண்டும். மேலும் இதனை முறையாக பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்.
கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் முறையாக காப்பீடு செய்ய வேண்டும்.
நிதி மற்றும் கொள்முதல் குழுவினரின் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்கள் அக்குழுவினரால் தனியாக பதிவேட்டில் பராமரிக்கப்பட வேண்டும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு இயற்றப்பட்ட தீர்மானங்களை தெரிந்து கொண்டு தீர்மான புத்தகத்தில் கையொப்பமிடுகின்றனரா என்பதை திட்ட ஒருங்கிணைப்பு அணி உறுதி செய்ய வேண்டும்.
தினசரி செலவினங்களுக்காக குறைந்தபட்ச தொகையை கையிருப்பில் வைத்துக் கொள்ளலாம்.
ரொக்க புத்தகத்தினை மாத இறுதியில் செயலாளர் மற்றும் பொருளாளர் கணக்கை சரி பார்த்து கையொப்பமிட வேண்டும்.
வரவுகளுக்கு ரசீது தயாரித்து அதற்கான தலைப்பின் கீழ் வரவு வைக்க வேண்டும்.
வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கு உரிய தீர்மானம் நகல் இணைக்கப்பட வேண்டும்.
செலவினங்களுக்கு செலவின சீட்டை தயாரித்து உரிய ரசீதுடன் இணைத்து மாத வாரியாக கோப்புகளில் பராமரிக்க வேண்டும்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தவணை முறையில் நிதி பெறுவதற்கான இலக்குகள்
கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி மற்றும் சிறப்பு நிதியின் தவணைகள் மற்றும் அடுத்தடுத்த தவணையினைப் பெற அடைய வேண்டிய இலக்குகள் குறித்து பின் வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
கிராம வறுமை ஒழிப்பு சங்க தொடக்க நிதி ரூ. 40000
மக்கள் பங்கேற்புடன் இலக்கு மக்கள் பட்டியல் உருவாக்கப்பட்டு கிராம சபையின் ஒப்புதலைப் பெறுவது
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சமூக தணிக்கை குழு அமைக்கப்பட்டு கிராம சபையின் ஒப்புதலைப் பெறுவது வங்கி கணக்கு துவக்குவது
கிராம வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர் பணி அமர்த்தப்பட்டு பதிவேடுகள் பராமரிப்பு பயிற்சி அளிக்கப்படுவது
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் மாவட்ட சங்கத்திற்கு இடையே மொத்த கூட்டுநிதி ஒப்பந்தம் ஏற்படுத்துவது
கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி முதல் தவணை (கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியில் கிராம வறுமை ஒழிப்பு சங்க தொடக்க நிதி 40000 போக மீதி நிதி) 40ரூ
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சமூக தணிக்கைக் குழுவிற்கு திட்ட விளக்க கையேடு செயல்பாட்டு வழிகாட்டி மற்றும் சமூக பொறுப்புடைமை பயிற்சி அளிக்கப்படுவது
கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திட்டம் உருவாக்கப்பட்டு (திறன் வளர்ப்புத் திட்டம், இளைஞர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சிறப்பு குழு திட்டம் மற்றும் பழங்குடியினர் திட்டம் (தேவையெனில்) அதற்கு கிராம சபையில் ஒப்புதல் பெறுவது
ஊராட்சி தொடக்க நிதிக்கு, சமூக தணிக்கை குழுவின் பரிந்துரையுடன் ஊராட்சியிடம் பயன்பாட்டு சான்றிதழை பெற்று கிராம சபையில் ஒப்புதல் பெறுவது
பிற் சேர்க்கை-1, ஒப்பந்தம்-1 கையெழுத்திடப்படுவது
கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி இரண்டாம் தவணை 40ரூ
பெறப்பட்ட மொத்த நிதியில் குறைந்தது 60ரூ பயன்படுத்தப்பட்டு, முன்னேற்ற அறிக்கை மற்றும் பயன்பாட்டு சான்றிதழுக்கு சமூக தணிக்கை குழு மற்றும் கிராம சபை ஒப்புதல் அளிப்பது
குறைந்தது 60ரூ புதிய சுய உதவிக்குழுக்கள் தரமதிப்பீடு செய்யப்பட்டு நிதி இணைப்பினைப் பெறுவது
கண்டறியப்பட்ட பழங்குடியினர், நலிவுற்றோரில் குறைந்தது 40ரூ திட்ட நிதியிலிருந்து அல்லது பிற இணைப்புகளின் மூலம் உதவி பெறுவது
குறைந்தது 15ரூ இலக்கு மக்களாக உள்ள இளைஞர்கள் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பினைப் பெறுவது அல்லது சுய தொழில் வாய்ப்பினைப் பெறுவது
கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி மூன்றாம் தவணை (20ரூ)
பெறப்பட்ட மொத்த நிதியில் குறைந்தது 60 ரூ பயன்படுத்தப்பட்டு, முன்னேற்ற அறிக்கை மற்றும் பயன்பாட்டு சான்றிதழுக்கு சமூக தணிக்கை குழு மற்றும் கிராம சபை ஒப்புதல் அளிப்பது
குறைந்தது 80ரூ இலக்கு மக்களின் சுய உதவி குழுக்கள் தர மதிப்பீடு செய்யப்பட்டு வங்கி மூலம் நிதி இணைப்பினைப் பெறுவது
கண்டறியப்பட்ட பழங்குடியினர், ஊனமுற்றோர், நலிவுற்றோரில் குறைந்தது 80 ரூ திட்ட நிதியிலிருந்து அல்லது பிற துறை இணைப்புகளின் மூலம் உதவி பெறுவது
குறைந்தது 40ரூ இலக்கு மக்களாக உள்ள இளைஞர்கள் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பினை பெறுவது அல்லது சுய தொழில் வாய்ப்பினைப் பெறுவது
ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாடு