நீங்கள் நிற்கும் ஸ்டைல் மூலம் உங்கள் ஆளுமை பண்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.!

நீங்கள் நிற்கும் ஸ்டைல் மூலம் உங்கள் ஆளுமை பண்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.!

Personality Test

Personality Test | சோஷியல் மீடியாக்களில் சுவாரசியமான விஷயங்கள் ட்ரெண்டாக தவறுவதில்லை. சமீப மாதங்களாக ஆப்டிகல் இல்யூஷன்கள் மற்றும் பர்சனாலிட்டி டெஸ்ட்கள் நெட்டிசன்களிடையே பிரபலமாகி உள்ளன.

நீங்கள் உங்கள் கால்களை ஒன்றோடொன்று இணையாக சேர்த்து வைத்து நிற்கிறீர்களா..? அல்லது கால்களை சற்று விலக்கி வைத்தா கால்களை குறுக்கே வைத்து நிற்கிறீர்களா அல்லது ஒரு காலை முன்னோக்கி வைத்து நிற்கும் பழக்கம் உடையவரா.? உங்களின் ஆளுமை பண்புகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஆம், நீங்கள் நிற்கும் ஸ்டைல்கள் உங்களின் ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்துகிறது.

நீங்கள் நிற்கும் ஸ்டைல் உங்கள் ஆளுமை பற்றி என்ன சொல்கிறது?

ஸ்டாண்டிங் பொசிஷன் பெர்சனாலிட்டி 1:

கால்களை இணையாக வைத்து கொண்டு நிற்பவரா? ( Legs Parallel)

கீழே உள்ள படத்தில் இருப்பது போல நிற்பவர் என்றால்...

நீங்கள் உங்கள் இரு கால்களை ஒன்றுக்கொன்று இணையாக வைத்து நிற்கும் பழக்கம் உடையவர் என்றால், உங்கள் ஆளுமை கீழ்ப்படிதல் அல்லது அதிகாரத்திற்கான மரியாதை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இந்த ஸ்டைலில் நிற்பவர்கள் ஒரு விஷயத்தில் நடுநிலையான நிலைப்பாட்டை கொண்டிருப்பார்கள். உரையாடல் அல்லது விவாதங்களில் பங்கேற்றாலும் பேசும் விஷயங்கள் மீது எந்த வலுவான உணர்வுகளையும் ஈடுபாட்டையும் பெரும்பாலும் காட்டமாட்டார்கள்.

பொதுவாக பெண்கள் தங்கள் பெண் சகாக்களுடன் பேசும் போது அல்லது ஒரு விஷயத்தில் ஆர்வம் காட்டாத போது இந்த ஸ்டாண்டிங் பொசிஷனில் நிற்பதைக் காணலாம். இருப்பினும் உரையாடலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் இல்லை. உங்கள் தகவல் தொடர்புகளில் நீங்கள் நிச்சயமாக தந்திரோபாய நிலையை கொண்டிருக்கிறீர்கள்.

ஸ்டாண்டிங் பொசிஷன் பெர்சனாலிட்டி 2:

கால்கள் சற்று விலக்கி வைத்து நிற்பவரா.? (Legs Slightly Apart)கீழே உள்ள படத்தில் இருப்பது போல நிற்பவர் என்றால்...

நீங்கள் கால்களை சற்று தள்ளி வைத்து நிற்பவர் என்றால், உங்கள் ஆளுமை அதிகாரம் மற்றும் கட்டளையிடும் தன்மையை பிரதிபலிக்கிறது. எப்போதும் நம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்துவீர்கள். கூட்டத்தின் மத்தியில் இருந்தாலும் கூட பயம் மற்றும் தயக்கம் கொள்ளாமல் உங்களுக்கு தேவை என்றால் உங்கள் நிலைப்பாட்டை யாருக்காகவும் தயங்காமல் எடுத்துரைப்பீர்கள். கால்களை சற்று ஒதுக்கி வைத்துக்கொண்டு நிற்பவர்களும் தங்கள் தகவல்தொடர்பு வழிகளில் ஆதிக்கம் செலுத்துவதாகக் காணப்படுகின்றனர். இந்த ஸ்டாண்டிங் பொசிஷன் சக்திவாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஆண்களில் பலர் இந்த ஸ்டைலில் நிற்கிறார்கள். எனினும் அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தை காட்ட கூடிய சில பெண்களும் இந்த பொசிஷனில் நிற்பார்கள்.

ஸ்டாண்டிங் பொசிஷன் பெர்சனாலிட்டி 3:

ஒரு காலை முன்னோக்கி வைத்து நிற்பவரா.? (One Leg Forward)கீழே உள்ள படத்தில் இருப்பது போல நிற்பவர் என்றால்...

நீங்கள் ஒரு காலை முன்னோக்கி வைத்து நிற்பவர் என்றால் உங்கள் ஆளுமை ஆறுதல் மற்றும் திருப்தியை பிரதிபலிக்கிறது. நீங்கள் மிகவும் நிதானமானவர் மற்றும் எப்போதும் நீங்கள் உங்கள் உள்ளுணர்வோடு இணைந்து வாழ்கிறீர்கள். கடந்த மற்றும் எதிர்காலத்தை பற்றி கவலை கொள்ளாமல் நீங்கள்நிகழ்காலத்தை மட்டுமே யோசித்து வாழ்வீர்கள். உங்கள் உணர்வு மற்றும் உணர்ச்சிகளை காட்டுவதில் வெளிப்படையாக இருப்பீர்கள். உங்கள் கருத்துப் பரிமாற்றத்தில் நேர்மையாக இருப்பீர்கள். ஆர்வம் அல்லது ஈர்ப்பின் அடையாளத்தை கொண்டிருப்பீர்கள். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஆர்வமின்மை ஏற்பட்டால் சற்றும் தயங்காமல் அதிலிருந்து வெளியேறும் முடிவை எடுப்பீர்கள்.

ஸ்டாண்டிங் பொசிஷன் பெர்சனாலிட்டி 4:

காலை குறுக்கே வைத்து நிற்பவரா? (Legs Crossed)கீழே உள்ள படத்தில் இருப்பது போல நிற்பவர் என்றால்...

உங்கள் ஒரு காலுக்கு குறுக்கே இன்னொரு காலை வைத்து கொண்டு நிற்பவர் என்றால் கூட்டத்தில் இருப்பதை விட உங்கள் தனிமையாக இருப்பதை அதிகம் விரும்புவீர்கள். நீங்கள் வேலையாட்களிடம் அவ்வளவு எளிதில் பழக மாட்டீர்கள். பொதுவாக புதிய நபர்களிடம் பேசும் போது நீங்கள் காலை குறுக்கே வைத்து நிற்கும் பழக்கத்தை அதிகம் கடைபிடிப்பீர்கள். இதை பதற்றம் என்று சொல்வதை விட, புதிய சூழல் அல்லது நபர்களை ஏற்று கொள்வதில் உள்ள சிக்கலை குறிக்கிறது. மேலும் தற்காப்பு எண்ணம் கொண்டவராக இருப்பீர்கள்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை