Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

7 ஜூலை, 2022

 


உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏழை மக்கள் இலவசமாகப் பெற வகை செய்யும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும்.


வரலாறு


ஜூலை 23, 2009 அன்று இந்திய மத்திய சுகாதரத் துறை மருத்துவ காப்பீட்டு (Medical Insurance) திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதே போன்ற திட்டம் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் ஆரோக்கியஸ்ரீ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு மருத்துவ காப்பீட்டுத் தொகைக்கான தவணைத் தொகையை (பிரிமியம்) பயனாளிகளே கட்ட வேண்டும். ஆனால் தமிழகத்தில் அத்தொகையை மாநில அரசே கட்டியது. இதே போன்று தமிழக மாநில அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான தவணைத் தொகையாக மாதம் ரூ. 20 அவர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் எனும் பெயரில் ஸ்டார் சுகாதாரக் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஜூலை 2011ல் இத்திட்டம் இரத்து செய்யப்பட்டது.


பயனாளிகள்


தமிழ்நாடு அரசின் பல்வேறு நல வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள்

குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 72000க்கும் குறைவாக உள்ள அனைத்துக் குடும்பங்கள். 

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற்று பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்

பயன்பெறும் தொகை


தமிழக முதல்வரின் காப்பீடு திட்டத்தில் ரூ. 1 இலட்சம் முதல் ரூ. 1.5 இலட்சம் வரை நான்காண்டு காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ. 4 இலட்சம் வரையிலான மருத்துவச் செலவுகள், குறிப்பிட்டுள்ள நோய் மற்றும் குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு மட்டும், அரசால் குறிப்பிட்ட மருத்துவமனைகள் மூலம் மருத்துவ சிகிச்சை பெறலாம்.


நோய்களும் சிகிச்சைகளும்

இத்திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும் நோய்கள்:


இதய மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை


இதய இரத்த குழாய் அடைப்பு, பைபாஸ் சிகிச்சை

பிறவி இதய நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள்

இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை

ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டெண்ட் பொருத்துதல்

பலூன் வால்வுலோபிளாஸ்டி

தற்காலிக மற்றும் நிரந்தர பேஸ் மேக்கர் பொருத்துதல்

இரத்த குழாயில் இரத்த கட்டி அமைப்பு நீக்கும் அறுவை சிகிச்சை

அடைபட்ட இதய இரத்த குழாய்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சிகிச்சை


சிறுநீரக நோய்கள்


சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மாற்று சிறுநீரகம் பொருத்துதல்

சிறுநீர் கல் அதிர்வு அலை சிகிச்சை

சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்

புரோஸ்டேட் சுரப்பி நோய்களுக்கான அறுவை சிகிச்சை

மூளை மற்றும் நரம்பு மண்டலம்


மூளை மற்றும் தண்டுவடத்தில் உயிர் காக்கும் அவசர அறுவை சிகிச்சைகள்

மூளை மற்றும் தண்டுவட நோய்கள், கபாலத்தின் அடித்தளத்தில் உள்ள நோய்களுக்கு சிகிச்சை மற்றும் நவீன அறுவை சிகிச்சைகள்

தீராத வலிப்பு நோய்களுக்கான அறுவை சிகிச்சை

முதுகுத் தண்டுவடம் விலகுதல் தொடர்பான நோய்களுக்கான அறுவை சிகிச்சை

மூளையில் உள்ள இரத்த குழாய் மாற்றம் மற்றும் அடைப்பினால் ஏற்படும் பக்கவாதத்திற்கான அறுவை சிகிச்சைகள்

பிறவிக் குறைபாடுகள் மற்றும் தலை நீர் வீக்கம் தொடர்பான நோய்களுக்கான அறுவை சிகிச்சை

குல்லியன்பாரி வாத நோய் சிகிச்சை

முடநீக்கியல் அறுவை சிகிச்சைகள்


இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

எலும்பு முறிவு மற்றும் மூட்டு விலகலுக்கான அறுவை சிகிச்சைகள்

எலும்பு மற்றும் மூட்டு முறிவுகளை சரி செய்யும் அறுவை சிகிச்சைகள்

எலும்பு மூட்டு உள் அக நோக்கிக் கருவி மூலம் சரி செய்தல்

மூட்டு, தசை, நாண் நோய்கள்

கண் நோய் சிகிச்சை


விழித்திரை விலகல் அறுவை சிகிச்சை மற்றும் இதர மருத்துவ முறைகள்

கண் நீர் அழுத்த நோய்க்கான அறுவை சிகிச்சை

விட்ரெக்டமி அறுவை சிகிச்சை

கருவிழி மாற்று அறுவை சிகிச்சை

விழித்திரை நோய்களுக்கான லேசர் சிகிச்சை

லீனியர் ஆக்ஸிலேட்டர் சிகிச்சை

இரத்தக் குழாய்களுக்கான அறுவை சிகிச்சை


பித்தப்பை, கல்லீரல் மற்றும் கணையம் அறுவை சிகிச்சை

உணவுப் பாதையில் அரிப்பால் ஏற்படும் சுருக்கங்களுக்கான சிகிச்சை

லேப்ராஸ்கோப்பி கருவி மூலம் பித்தப்பை அகற்றல்

ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சைகள்


தீக்காயம் மற்றும் அதன் பின் விளைவுகளுக்கான சிகிச்சைகள்

உதட்டுப் பிளவு மற்றும் மேல் அன்னப் பிளவு சீர்ப்படுத்துதல்

உடல் இயக்கத்தை மட்டுப்படுத்தும் சுருக்கங்களை சீர்படுத்துதல்


காது, மூக்கு, தொண்டை


மேஸ்டாய்டு எலும்பு அகற்றுதல்

ஸ்டேபிஸ் எலும்பு அகற்றுதல்

சைனஸ் நோய்க்கான எண்டாஸ்கோபி சிகிச்சை

கருப்பை நோய்கள்


புற்று நோய் பொருட்டு கருப்பை, சினைப்பைகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல்

நெஞ்சக நோய்கள்


நுரையீரல் சீழ் கட்டி நெஞ்சு உறைக்குள் நீர் கோர்த்தல் மற்றும் நெஞ்சு உறைக்குள் காற்று சேருதல் ஆகியவற்றுக்கான சிகிச்சை

இரத்த நோய்கள்


தாலிசீமியா மற்றும் சிக்கிள் செல் இரத்த சோகை நோய்க்கான மருத்துவம்

இதர பிற நோய்கள்


தைராய்டு சுரப்பி அறுவை சிகிச்சை

விபத்து மற்றும் இதர காயங்களுக்கு உள்நோயாளி சிகிச்சை தேவைப்படும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள்

கோமா மற்றும் மூளைக் காய்ச்சல் நோய்களுக்கு மருத்துவம்

பிறவிக் குறைபாடுகளுக்கான அறுவை சிகிச்சைகள்

திட்டத்தில் இழப்பீடு செய்ய முடியாத சிகிச்சைகள்

மருத்துவப் பரிசோதனையின் பொழுது மேற்குறிப்பிட்ட நோய்கள் தவிர மற்ற நோய்கள் தவிர மற்ற நோய்களுக்கான பரிசோதனைகளுக்கு ஏற்படும் செலவுகள்

சிகிச்சைக்கு முன்பும் பின்பும் தேவைப்படும் மருந்து, மாத்திரைகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள்

இங்கு பட்டியலிடப்பட்டுள்ள சிகிச்சைகள் தவிர்த்து வேறு சிகிச்சைகளுக்கான செலவுகள்

திட்டத்திற்கான மருத்துவமனைகள்

தற்போது இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை அரசின் சார்பாக நடைமுறைப்படுத்தி வருவது இந்திய யுனைடெட் காப்பீட்டு நிறுவனம் ஆகும். தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான மருத்துவச் செலவுகள் அனைத்தும் ஒன்றிணைத்து ஒரே தொகையாக குறிப்பிட்ட மருத்துவமனைக்கு மருத்துவச் செலவுகள் ஈடு செய்யப்படும்.


சிகிச்சை பெறும் வழிமுறைகள்

பதிவு செய்தல்


காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும் அடையாள சிறப்பு அட்டையைக் காண்பித்தால் மட்டுமே பயனடைய முடியும்.


இந்த சிறப்பு அட்டை வழங்கும் வரை:


குடும்பத் தலைவராயின் நலவாரிய உறுப்பினர் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

குடும்பத் தலைவர் தவிர்த்த மற்ற உறுப்பினர்களாயின், நலவாரிய உறுப்பினர் அட்டையுடன் கிராம, நகர பஞ்சாயத்துகளாயின் கிராம நிர்வாக அதிகாரி / நகராட்சி / மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட வரி வசூலிப்பாளரிடமிருந்து பெறப்படும் புகைப்பட அடையாளச் சான்றிதழ் (அல்லது)

அரசாங்கத்தால் வழங்கப் பெற்ற புகைப்படத்துடன் கூடிய ஏனைய அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையின் நகல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

எந்த ஒரு நலவாரிய உறுப்பினராக அல்லாத, இத்திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியாக ஏனைய அனைவரும் குடும்ப அட்டையின் நகல் (மற்றும்)


கிராம நிர்வாக அதிகாரி / வரி வசூலிப்பவர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரால் வழங்கப்படும் குடும்ப வருமானச் சான்றிதழ் மற்றும் கிராம / நகர பஞ்சாயத்துக்களாயின் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலராலும், நகராட்சி / மாநகாராட்சிகளில் வரி வசூல் அலுவலராலும் பயனாளியின் புகைப்படத்துடன் கூடிய சான்றும் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசாங்கத்தால் வழங்கப் பெற்ற புகைப்படத்துடன் கூடிய ஏதாவதொரு அடையாள அட்டை ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

முதல்முறையாக சிகிச்சை மேற்கொள்ளும் போது மட்டுமே சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் சான்றிதழ் அல்லது மேற்குறிப்பிட்ட வேறு சான்றிதழ்களை சமர்ப்பித்து பயனடைய இயலும். அடுத்து வரும் மருத்துவ சிகிச்சைகளின் போது, பயனீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற உரிய அடையாள சிறப்பு அட்டையைப் பெற்று மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயனடைய முடியும்.

அனுமதிக்குத் தேவையான மருத்துவ ஆவணம்


அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அல்லது பொதுநல மருத்துவர்களால் உரிய படிவத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைச் சீட்டு. எனினும், அவசர சிகிச்சைக்கு மருத்துவமனையில் அளித்த பரிந்துரைச் சீட்டு மற்றும் அடையாள அட்டை இல்லாமல் அனுமதிக்கப்படலாம். ஆனால் இரண்டு நாட்களுக்குள் தக்க அத்தாட்சியைச் சமர்ப்பிக்க வேண்டும்.


தொடர்பு அதிகாரி / செயல் அலுவலகம்


பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்தின் தொடர்பு அதிகாரி ஒருவர் அந்நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு மருத்துவமனையிலும் இத்திட்டச் செயல்பாட்டிற்கான ஒரு செயல் அலுவலகம் அந்தந்த மருத்துவமனைகளால் செயல்படுத்தப்படும். இந்த செயல் அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் ஸ்டார் காப்பீட்டு நிறுவன தொடர்பு அதிகாரி பயனீட்டாளர்களுக்குச் செய்து கொடுப்பார்.


திட்டச் செயல்பாடு

இத்திட்டத்தை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் என்ற இந்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்துகின்றது.

பயனாளிகள் அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் முகாம்களுக்குச் சென்று, காப்பீட்டு நிறுவனத்தினிடமிருந்து, தங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் அடங்கிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த அடையாள அட்டையைக் காண்பித்து ஏழைக் குடும்பங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அல்லது குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளலாம்.

திட்டச் செலவு

ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்குக் காப்பீட்டுத் தவணைத் தொகையாக (பிரிமியம்) ஆண்டொன்றுக்கு 517 கோடி ரூபாயை தமிழக அரசே தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்