தூங்கும் போது எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும் தெரியுமா?


பொதுவாக அனைவருக்குமே தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவர் ஒவ்வொரு நாளும் நிம்மதியாக தூங்கினால் மேட்டுமே. அவர்களுடைய ஒவ்வொரு நாளுமே புத்துணர்ச்சியாக இருக்கும். தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியமே அதேபோல் தூங்கும் திசையும் மிக முக்கியம். அதாவது நாம் எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்? படுக்கும் போது எப்படி தூங்க வேண்டும் என்ற தூங்கு முறைக்கும் பல விதிமுறைகள் உள்ளது அதைப்பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

வாஸ்து சாஸ்த்திரம் தூங்கும் திசை – Thalai Vaithu Thoongum Thisai:

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கும் போது, அதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க நேரிடும். அதோடு சரியான நிலையில் தூங்குவதன் மூலம், உடல்நலத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நாம் எப்படி ஒரு வீட்டை வாங்கும் போது வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைந்துள்ளதா என்று பார்க்கிறோமோ, அதேப் போல் தூங்கும் திசையையும் தவறாமல் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம். சரி இந்த பதிவில் நாம் எந்த திசையில் தூங்கினால் என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பதை பற்றி படித்தறியலாம்.

வடக்கு திசையில் தலை வைத்து படுக்கலாமா:

வடக்கு திசையில் தலை வைத்து தூங்குவது நல்லதல்ல என கருதப்படுகிறது. ஒருவர் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால்களை நீட்டித் தூங்கினால், உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

குறிப்பாக வடக்கு திசையில் முக்கியமாக பிணங்களின் தலையை வடக்கு திசையில் தான் வைப்பார்கள். எனவே எக்காரணம் கொண்டும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்காதீர்கள்.

வடக்கு திசையில் தலை வைக்கக்கூடாதற்கான அறிவியல் உண்மை காரணம் என்ன தெரியுமா?

பூமியின் வடக்கு திசையில் நேர் மின்னோட்டமும், தெற்கு திசையில் எதிர் மின்னோட்டமும் உள்ளது. அதேப் போல் மனித உடலின் தலையில் நேர் மின்னோட்டமும், கால் எதிர் மின்னோட்டமும் கொண்டது. எப்போதும் எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்கும்.

ஒரே துருவங்களில் படுக்கும் போது, மின்னோட்டங்களுக்கு இடையே இடையூறு ஏற்பட்டு, உடலின் ஆற்றல் பாதிக்கப்பட்டு, ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே வடக்கு திசையில் தலைவைத்து படுப்பதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

எந்த பக்கம் தூங்க வேண்டும்?

தெற்கு திசையில் தலை வைத்து தூங்கலாமா?

தெற்கு திசை மிகச்சிறப்பான திசையாக கருதப்படுகிறது. ஒருவர் தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால்களை நீட்டி தூங்கினால், புகழ், செல்வம், வெற்றி போன்றவை தேடி வருவதோடு, மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் மேம்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

எந்த பக்கம் தலை வைத்து தூங்க வேண்டும்? – Thalai Vaithu Thoongum Thisai

கிழக்கு திசையில் தலை வைத்து படுக்கலாமா?

கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது மிகவும் நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கும் போது, இந்த திசையில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல்கள், உடலுக்கு அனைத்து வகையான நேர்மறை ஆற்றலையும் வழங்கும்.

முக்கியமாக இந்த திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, எப்போதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

கிழக்கு திசையில் குழந்தைகளும், இளைஞர்களும் தூங்குவதும் படிப்பதும் மிகவும் நல்லது. ஏனெனில் இந்த திசையில் தலை வைத்து தூங்கும் போது, நினைவாற்றல் அதிகரிப்பதோடு, படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த முடியும்.

கணக்குவழக்கு பார்ப்பவர்கள் கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கினால், அவர்களின் மூளை தூக்கத்திலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குமாம்.

மேற்கு திசையில் தலை வைத்து தூங்கலாமா?

மேற்கு திசையில் தலை வைத்து தூங்கினால், ஒவ்வொரு நாளும் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் காணக்கூடும். மேலும் இந்த திசையில் தலை வைத்து தூங்குபவர்கள் பணக்காரர்களாகவும், பெயர் புகழுடன் வாழ்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

எந்த திசையில் நாம் தூங்க வேண்டும்?

தூங்கும் போது, முதலில் சிறந்த திசையாக கருதப்படுவது தெற்கு, கிழக்கு,பின்பு தான் மேற்கு. வடக்கு திசையில் மட்டும் எக்காரணம் கொண்டும் தலை வைத்து படுக்காதீர்கள். மேலும் மேற்சொன்ன திசைகள் உங்களுக்கு பல நன்மைகளை தரும். இதுவரை நீங்கள் மேற்சொன்ன குறிப்புகளை பின்பற்றவில்லை என்றாலும் பரவாயில்லை. இதற்குமேல் பின்பற்றி வாழ்வில் ஏற்றத்தை காணுங்கள்.

மல்லாந்து கால்களையும் கைகளையும் அகற்றி வைத்து கொண்டு தூங்க கூடாது. அப்படி தூங்கும் போது அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகிறது. எனவே குறட்டை உண்டாகும். அதேபோல் குப்புற படுத்து தூங்கவும் கூடாது.

இடது கை கீழாகவும், வலது கை மேலாகவும் வைத்து தான் தூங்க வேண்டும். இடது புறமாக ஒரு கழுத்து வைத்து தூங்க வேண்டும். அப்படி தூங்கும் போது வலது மூக்கில் சுவாசம் சூரிய கலையில் ஓடும். இதில் 8 அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். மேலும் உடலுக்கு தேவையான வெப்ப காற்று அதிகரித்து பித்த நீர் அதிகம் ஆகி உணவு எளிதாக செரிமானம் அடையும். இதயத்திற்கு சீரான பிராண வாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது புறம் படுப்பதால் இடது மூக்கு வழியாக சந்திர கலை சுவாசம் ஓடும். இதனால் 12 அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். சாப்பிட உணவு செரிமாணமாகாது.

Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்