தமிழ்நாடு நாட்டுப்புறக்‌ கலைஞர்களுக்கு இசைக்கருவிகள்‌, ஆடை மற்றும்‌ அணிகலன்கள்‌ வாங்க நிதியுதவி வழங்கும்‌ திட்டம்‌

 


தமிழ்நாடு நாட்டுப்புறக்‌ கலைஞர்களுக்கு இசைக்‌ கருவிகள்‌, ஆடை மற்றும்‌

அணிகலன்கள்‌ வாங்க நிதியுதவி வழங்குதல்‌

தொன்மை சிறப்புமிக்க தமிழக கிராமியக்‌ கலைகளைப்‌ போற்றி வளர்க்கும்‌ கலைஞர்களை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, இசைக்‌ கருவிகள்‌, ஆடை மற்றும்‌ அணிகலன்கள்‌ வாங்கிட தமிழ்நாடு நாட்டுப்புறக்‌ கலைஞர்கள்‌ நலவாரியத்தில்‌ பதிவு பெற்ற கலைஞர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ நபர்‌ ஒருவருக்கு ரூ. 10000 வீதம்‌ 500 கலைஞர்களுக்கு, தமிழ்நாடு இயல்‌ இசை நாடக மன்றம்‌ மூலம்‌ நிதியுதவி வழங்கப்படும்‌.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்‌ விவரம்‌

  • விண்ணப்பிக்கும்‌ கலைஞர்கள்‌ தமிழ்நாடு நாட்டுப்புறக்‌ கலைஞர்கள்‌ நலவாரியத்தில்‌ பதிவு பெற்றவராகவும்‌, பதிவினைப்‌ புதுப்பித்தவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.
  • தனிப்பட்ட கலைஞரின்‌ வயது 31.03.2022 தேதியில்‌ 18 வயது நிரம்பியவராகவும்‌, 60 வயதுக்குட்பட்டவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

விண்ணப்பப்‌ படிவங்கள்‌ இலவசமாக வழங்கப்படுகின்றது. தபால்‌ மூலம்‌ விண்ணப்பம்‌ பெற விரும்பும்‌ கலைஞர்கள்‌ சுயமுகவரியிட்ட உறையில்‌ ரூ. 10-க்கான தபால்‌ தலையை ஒட்டி மன்றத்திற்கு அனுப்பிப்‌ பெற்றுக் கொள்ளலாம்‌.

உறுப்பினர்‌- செயலாளர்‌
தமிழ்நாடு இயல்‌ இசை நாடக மன்றம்‌
31, பொன்னி, பி.எஸ்‌. குமாரசாமி ராஜா சாலை
சென்னை 600 028
தொலைபேசி எண்: 044 - 24937471

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ 15.03.2022 செவ்வாய்‌ மாலை 5:45 மணிக்குள்‌ அல்லது அதற்கு முன்னரோ மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்‌, விண்ணப்பங்களை நேரிலும்‌ அளிக்கலாம்‌.

விண்ணப்பம்: நாட்டுப்புறக்‌ கலைஞர்களுக்கு இசைக்கருவிகள்‌, ஆடை மற்றும்‌ அணிகலன்கள்‌ வாங்க நிதியுதவி வழங்கும்‌ திட்டம்‌ Link

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்