ஆதார் கார்டில் எத்தனை போன் நம்பர் இணைப்பு? தெரிந்து கொள்ள எளிய வழிமுறைகள்!

 


ஆதார் கார்டில் எத்தனை போன் நம்பர் இணைப்பு? தெரிந்து கொள்ள எளிய வழிமுறைகள்!

இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் அட்டை அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. மேலும் இதில் மொபைல் எண் இணைக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும். தற்போது உங்கள் ஆதார் அட்டையுடன் எத்தனை போன் நம்பர் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

ஆதார் கார்டு இணைப்பு

இந்தியாவில் ஆதார் அட்டை தனிநபரின் அடையாள அட்டைகளுள் முக்கியமான ஒன்றாகும். மேலும் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இதில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும். அதன்படி ஆதரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் மற்ற அடையாள ஆவணங்களில் இருப்பது போன்று சரியானதாக இருக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து பயோமெட்ரிக் தகவலில் ஐரிஸ், விரல் ரேகை பதிவு மற்றும் முக அடையாள புகைப்படம் உள்ளிட்டவை சரியானதாக இடம்பெற்றிருக்க வேண்டும். மேலும் தற்போது UIDAI ஆதார் விதிகளை கடுமையாக்கியுள்ளது. அதாவது, அரசின் பலன்கள், சேவைகள், மானியங்களை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உங்களின் ஆதாரில் மொபைல் எண் இணைக்க வேண்டியது கட்டாயமாகும். ஏனெனில் அப்போது தான் நீங்கள் ஆதாரில் ஏதேனும் விவரங்களை திருத்தங்களை மேற்கொள்ள முடியும். அப்போது உங்களின் மொபைல் நம்பருக்கு ஓடிபி எண் அனுப்பப்படும்.

இப்போது உங்களின் ஆதாரில் எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

1. இதற்கு முதலில் tafcop.dgtelecom.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இப்போது உங்களின் 10 இலக்க மொபைல் நம்பரை உள்ளிட வேண்டும். இதனை பதிவிட்டு Sign In செய்ய வேண்டும்.

3. இறுதியாக உங்களின் ஆதாருடன் எத்தனை மொபைல் நம்பர் இணைக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை பற்றி பார்ப்போம்.

4. நீங்கள் இதில் பயன்படுத்தாத மொபைல் எண்ணை நீக்க வேண்டுமெனில் இங்கு டெலிட் செய்து விடலாம்.


Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்