சரத்துகள்(ARTICLES)
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஜனவரி 26,1950 அன்று நடைமுறைக்கு வந்தபோது 22 பகுதிகள்,395 சரத்துகள், மற்றும் 8 அட்டவணைகள் இருந்தது.தற்போது 100க்கும் மேற்பட்ட சட்ட திருத்தங்களினால் சர்த்து அதிகரித்துள்ளது.
நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்களில் வடிவமைக்கப்பட்டது.
பகுதி - 1 (சரத்து 1- 4)
ஒன்றியமும் அதன் எல்லைகளும் (The Union And Its Territory)
சரத்து-1(article-1)
ஒரு ஒற்றை வரி வாசகம். 'இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். இந்தியாவுக்கு, 'பாரதம்' என்கிற பெயரை சாசனத்தின் முதல் பிரிவு குறிப்பிடுகிறது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு சாசனம் முக்கியத்துவம் தருகிறது. ஒன்றியத்தின் பெயரையும் அதன் பரப்பையும் குறிப்பிடுகிறது
சரத்து 2 மற்றும் 3(article 2&3)
புதிதாக ஒரு மாநிலத்தை தோற்றுவிப்பது பற்றிப் பேசுகின்றன.
சரத்து-4(article-4)
புதிய மாநிலம் தோன்றியதை ஒட்டி, இந்திய மாநிலங்களின் பட்டியலில் அதாவது ஒன்றாம் அட்டவணையில் மாற்றம் செய்ய அதிகாரம் வழங்குகிறது.
பகுதி-2 (சரத்து 5 - 11)
குடியுரிமை (Citizenship)
சரத்து-5 (Article-5):
இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியர்களே. அதாவது, பிறப்பின் மூலம் (by birth) ஒருவருக்கு, இந்தியக் குடியுரிமை கிடைக்கிறது.
சரத்து-6 (Article-6):
குடிபெயர்தல்மூலம் குடியுரிமை பெறுதல் (பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்து வந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது)
சரத்து-7 (Article-7):
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து சென்றவர்கள் இந்திய குடிமக்களாக கருதப்படமாட்டார்கள்.
சரத்து-8 (Article-8):
இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் வாழ்பவர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெறல் குறித்துக் கூறுகிறது.
சரத்து-9 (Article-9):
இந்திய குடியுரிமையை இழத்தல் பற்றி பேசுகிறது.இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இரட்டை குடியுரிமையை அனுமதிக்கவில்லை.
சரத்து-10 (Article-10)
இந்திய குடிமக்களாகும் ஒவ்வொருவரும் தொடர்ந்து இந்திய குடிமக்களாகவே இருப்பர் என்று சரத்து 10 கூறுகிறது.
சரத்து-11 (Article-11)
குடியுரிமையை ஒழுங்குபடுத்த பாராளுமன்றத்திற்கு உள்ள சட்டமியற்றும் அதிகாரத்தை சரத்து-11 குறிப்பிடுகிறது.இதன்படி 1955-ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டத்தை பாராளுமன்றம் இயற்றியது.
பாகம் III (சரத்து 12 - 35)
அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)
இப்பகுதி சாசன 'உரிமைகளின் பாதுகாவலன்' (Protector of Rights) எனப்படுகிறது.இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகளானது அமெரிக்க அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டது.
சரத்து-12 (Article-12):
அடிப்படை உரிமை சம்மந்தமான வரையறையை சரத்து-12 அரசுக்கு வழங்குகிறது.
சரத்து-13 (Article-13):
அடிப்படை உரிமைகளை மீறும் சட்டங்கள் செல்லாததாகி விடும் என்பதை சரத்து-13 குறிப்பிடுகிறது.
சரத்து-14 (Article-14):
சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு வழங்குதல் பற்றி குறிப்பிடுகிறது.
சரத்து-15 (Article-15):
சாதி,சமய, இனம் மற்றும் பிறப்பிட வேறுபாடுகளால் பாரபட்சம் காட்டாமை பற்றி குறிப்பிடுகிறது.
சரத்து-16 (Article-16):
பொது வேலை (public employment) பெறுவதில் அனைவருக்கும் சம வாய்ப்பு.
சரத்து-17 (Article-17):
தீண்டாமைக்குத் தடை, தீண்டாமை எந்த வடிவத்தில் கடைப்பிடிக்கப்பட்டாலும் அது சட்டப்படி தண்டனைக்கு உரியது.
சரத்து-18 (Article-18):
இராணுவத்திலும் கல்வித் துறையிலும் சாதனை புரிவோருக்கு வழங்கப்படும் பட்டங்களைத் தவிர பிற பட்டங்கள் ஒழிப்பு பற்றி குறிப்பிடுகிறது.
சரத்து-19 (Article-19):
பேச்சு உரிமை, ஆயுதங்கள் இன்றி அமைதியாக ஒன்று சேர, மன்றங்கள் அமைப்புகள் நடத்த, இந்தியாவுக்குள் எங்கும் சென்று வர, இந்தியாவுக்குள் எங்கும் வசிக்க - எல்லாக் குடிமகன் களுக்கும் உரிமை உண்டு. எழுத்துச் சுதந்திரம், பத்திரிகை, ஊடகங்கள், துணிச்சலுடன் செய்திகளை வெளியிடும் உரிமை ஆகியனவும் இப்பிரிவின் கீழ்தான் வருகின்றன. திரைப்படங்களுக்கு எதிராகக் கண்டனங்கள், தடைக்கான கோரிக்கைகள் வரும் போதெல்லாம், படைப்பாளிகள் தஞ்சம் புகும் பிரிவு இது. பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டால், அடைக்கலம் தருவதும், பொது நல ஊர்வலங்கள் நடத்த அனுமதிப்பதும் இந்தப் பிரிவுதான்.
சரத்து-20 (Article-20):
குற்றங்களுக்கு தண்டனை வழங்குவது பற்றி குறிப்பிடுகிறது.ஒரே குற்றத்துக்கு இரு முறை தண்டனை வழங்க கூடாது என்றும் குறிப்பிடுகிறது.
சரத்து-21 (Article-21):
வாழ்வதற்கான, தனிநபர் சுதந்திரத்துக்கான உரிமை. (Protection of life and personal liberty).
சரத்து-21-A (Article-21-A):
கல்வி உரிமை. 6 முதல் 14 வயது வரை, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக் கல்வியை உறுதி செய்தல். 2002-இல் கொண்டு வரப்பட்ட 86-ஆவது திருத்தம் இது.
சரத்து-22 (Article-22):
தகுந்த முகாந்திரம் இல்லாமல் யாரையும் கைது செய்யத் தடை விதிக்கிறது. கைதான 24 மணி நேரத்துக்கு உள்ளாக, நீதிபதி முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
சரத்து-23 (Article-23):
அடிமைத் தொழிலாளர் முறைக்குத் தடை விதிக்கிறது.அதாவது கட்டாய வேலை வாங்குவதை தடை செய்கிறது.
சரத்து-24 (Article-24):
தொழிலாளர் முறைக்குத் தடை விதிக்கிறது.அதாவது 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகளிலோ மற்றும் ஆபத்தான வேலைகளில் அமர்த்துவதை தடை செய்கிறது.
சரத்து-25 (Article-25):
விரும்பும் சமயத்தை பின்பற்றவும் மத பிரச்சாரம் செய்யவும் உரிமை வழங்குகிறது.
சரத்து-26 (Article-26):
கல்வி நிறுவனங்கள் நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள மத அமைப்புகளுக்கு அனுமதி.
சரத்து-27 (Article-27):
சமய வளர்ச்சிக்காக வரி செலுத்தாமல் இருக்க உரிமை வழங்குகிறது.
சரத்து-28 (Article-28):
சமய போதனைகளுக்குச் செல்லாமல் இருக்க உரிமை.
சரத்து-29 (Article-29):
சிறுபான்மையினர் மொழி,எழுத்து வடிவம் மற்றும் கலாச்சாரங்களைப் பாதுகாக்கும் உரிமை.
சரத்து-30 (Article-30):
சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி நிர்வகிக்கும் உரிமை.
சரத்து-31 (Article-31):
சொத்துரிமை (Right to property).1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 44- வது சட்டத்திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டது.
சரத்து-31-A (Article-31-A):
வணிகத் தோட்டங்களை பெறுவதற்கான சட்டப் பாதுகாப்பு.
சரத்து-31-B (Article-31-B):
குறிப்பிட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கான விதிமுறைகள்.
சரத்து-31-C (Article-31-C):
குறிப்பிட்ட வழிகாட்டும் நெறிமுறைக்கான சட்டப் பாதுகாப்பு.
சரத்து-32 (Article-32):
அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம்.
சரத்து-33 (Article-33):
இராணுவம், துணை இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகள் போன்ற துறைகளுக்கு அடிப்படை உரிமைகள் சிலவற்றை தடைசெய்ய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்குகிறது.
சரத்து-34 (Article-34):
இராணுவ விதிகள் (Martial law) நடைமுறையில் உள்ள பகுதிகளில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் நீதிமன்றம் செல்ல முடியாது.
சரத்து-35 (Article-35):
சரத்து-16, சரத்து-32, சரத்து-33, சரத்து-34-யை திருத்தவோ நீக்கவோ பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்பதை உறுதி செய்கிறது.
சரத்து-17, சரத்து-23 சம்மந்தமான விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகளை கூட்டவோ குறைக்ககவோ பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
பாகுதி-IV (சரத்து-36-51)
வழிகாட்டும் நெறிமுறைகள்
சரத்து-36 (Article-36):
சரத்து-39A(Article-39A):
இலவச சட்ட உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது,அதாவது எந்தக் குடிமகனுக்கும் தகுந்த நீதி கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமை என்பதை எடுத்துரைக்கிறது.
சரத்து-40:
கிராமப் பஞ்சாயத்துகள், சுய ஆட்சி அமைப்பகளாகச் செயல்பட வழி வகுக்கிறது. அதாவது கிராம நிர்வாகம் உயிர்ப்புடன் இருந்தால் மட்டுமே, ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட முடியும். அதனால்தான், இவ்வமைப்புகளுக்குத் தேவையான அனைத்து அதிகாரங்களையும், மாநில அரசு வழங்க வேண்டும் என்கிறது இப்பிரிவு.
சரத்து-41 (Article-41)
முதியோர். உடல் நலிவுற்றோர். ஆதரவற்றோர், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவுதல் பற்றி குறிப்பிடுகிறது.
சரத்து-42 (Article-42):
மகப்பேறு மானியம் வழங்குதல்.
சரத்து-43 (Article-43):
தொழிலாளர், உழைப்பாளர், பாட்டாளிகள் வாழ்வதற்குத் தேவையான அளவுக்கேனும் குறைந்தபட்ச கூலி பெறுவதை உறுதி செய்தல் பற்றி குறிப்பிடுகிறது.
சரத்து-43A (Article-43A):
தொழிற்சாலை நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்கும் பங்கு தர வேண்டும் என்கிறது.
சரத்து-43B (Article-43B):
கூட்டுறவு இயக்கத்தை ஆதரிக்கிறது.
சரத்து-44 (Article-44):
நாடு முழுதும் ஒரே மாதிரியான 'சிவில் சட்டம் (Uniform Civil Code).
சரத்து-45 (Article-45):
குழந்தைக் கல்வி, குழந்தைப் பராமரிப்பை வலியறுத்துகிறது.
சரத்து-46 (Article-46):
பட்டியல் இனம், பட்டியல் மரபினர் மற்றும் சமுதாயத்தின் நலிந்த பிரிவினரின் கல்வி மற்றும் பொருளாதாரத்துக்குப் பாடுபடுதல் அரசின் கடமை.
சரத்து-47 (Article-47):
பொதுச் சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்துள்ள உணவு வழங்குதல்.
சரத்து-48 (Article-48):
நவீன முறை வேளாண்மை, கால்நடைப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் வழங்குதல் பற்றி குறிப்பிடுகிறது.
சரத்து-48A (Article-48A):
வனங்கள் மற்றும் வன விலங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்குதல் பற்றி குறிப்பிடுகிறது.
சரத்து-49 (Article-49):
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் மற்றும் இடங்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் பற்றி குறிப்பிடுகிறது.
சரத்து-50 (Article-50):
அரசைச் சார்ந்து இராமல், சுதந்திரமாக, சுயேச்சையாக நீதிமன்றங்கள் இயங்க வழிவகை செய்கிறது.
சரத்து-51 (Article-51):
சர்வதேச பாதுகாப்பு, அமைதியை மேம்படுத்துதல். இவையாவும், அரசு ஆற்ற வேண்டிய கடமைகள். செஞ்சிக் கோட்டை - ஒரு தேசிய சின்னம். அதனை முறையாகப் பராமரித்தல் - பிரிவு 49-இன் கீழ் வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப் படுத்துமாறு, சட்டப்படி அரசைக் கட்டாயப்படுத்த முடியாது.
பாகுதி IV-A (சரத்து-51A)
அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)
அரசமைப்பு சட்டம், தேசியக் கொடி, மற்றும் தேசிய கீதத்தை மதித்து நடத்தல்.
நமது சுதந்திரப் போராட்டத்தின் உன்னத நோக்கங்களைப் பின்பற்றுதல்.