பிரதம மந்திரிகளின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், PMEGP

வேலைவாய்ப்பு திட்டம்

 மத்திய அரசின் மான்யத்துடன் இணைந்த கடன் திட்டமானது. இத்திட்டமானது, பிரதம மந்திரி ரோஸ்கார் (வேலைவாய்ப்பு) யோஜனா (திட்டம்) (PMRY) மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் (REGP) ஆகிய இரண்டையும் இணைத்து, 2008 ஆகஸ்டு ஆண்டு 15ம் தேதியன்று உருவாக்கப்பட்டது.

நோக்கம்

சிறு தொழில் மூலம் சுய வேலை வாய்ப்பை கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் உருவாக்குதல்
பாரம்பரிய தொழில்முனைவோர், கிராமப்புற/ நகர்ப்புறங்களில் வசிக்கும் வேலையில்லாதவர்களை ஒருங்கிணைத்து, முடிந்த வரை அவர்களது இடத்திலேயே சுய வேலைவாய்ப்பை உருவாக்கி தருதல்.
கிராமப்புற, நகர்ப்புற, பாரம்பரிய தொழில்முனைவோருக்கு தொடர்ந்து, நிரந்தரமாக வேலை வழங்குவதன் மூலம், வேலை இல்லா இளைஞர்கள் நகர்புறங்களுக்கு குடி பெயர்வதைத் தடுத்தல்.
பாரம்பரிய தொழில்முனைவோர்களின் வருமானம் ஈட்டும் திறமையை உயர்த்துவதன் மூலம், கிராமப்புற, நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கச் செய்தல்
நிதி உதவி - அளவும், வழங்கும் முறையும்
இத்திட்டத்தில் அளிக்கப்படும் நிதி உதவியின் அளவு
பயனாளிகளின் வகை
பயனாளிகள் பங்கீடு (திட்ட மதிப்பில்)
மான்யஉதவிஅளவு (திட்ட மதிப்பில்)
பகுதி (திட்டம் அமையுமிடம்)

நகர்புறம் கிராமப்புறம் பொதுப்பிரிவு
10%15%25%
சிறப்பு (ஷெட்யூல்ட்பிரிவு, மலை ஜாதியினர், மிகவும்பிற்படுத்தப்
பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள்ராணுவத்தினர், உடல்ஊனமுற்றோர், வடகிழக்கு மாநிலங்கள், மலைவாழ் மற்றும், எல்லைப்பகுதியினர்
05%25%35%
குறிப்பு:

உற்பத்தி துறையில், திட்டம் / தொழிற்க்கான அதிகபட்ச மதிப்பீடு 25 லட்சம் ரூபாய்.
வியாபாரம்/ சேவை துறையில்,  திட்டம் / தொழிற்க்கான அதிகபட்ச மதிப்பீடு 10 லட்சம் ரூபாய்.
திட்டம் / தொழிற்க்கான மொத்த மதிப்பில் மீதமுள்ள தொகையை வங்கிகளிடமிருந்து கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

பயனாளிகளுக்கான தகுதி

18 வயதுக்கு மேலுள்ள நபர்
இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்கு, வருமான வரம்பு கிடையாது.
உற்பத்தி துறையில் 10 லட்சத்திற்கும் அதிக மதிப்பிலான திட்டம், வியாபாரம்/ சேவை துறையில் 5 லட்சத்திற்கும் அதிக மதிப்பிலான திட்டம் துவங்குவோருக்கு கல்வித்தகுதி குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி.
இத்திட்டத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்படும் திட்டங்களுக்கு மட்டுமே உதவிகள் செய்யப்படும்.
சுய உதவிக்குழுக்கள் (வேறெந்த திட்டத்திலும் உதவி பெறாத வறுமைக் கோட்டிற்கு கீழிருப்போர் உட்பட) இத்திட்டத்தில் உதவி பெறத்தகுதியுடையவர்.
சொசைட்டி பதிவுச்சட்டம் 1860ல் பதிவு செய்துள்ள நிறுவனங்கள்.
கூட்டுறவு சங்கங்கள்.
சேவை மையங்கள்
பிரதம மந்திரியின் ரோஜ்கார் யோஜனா (PMRY), கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (REGP) மற்றும் மத்திய, மாநில அரசுத் திட்டங்களின் கீழ் செயல்பட்டு வரும் தற்போதைய தொழில் மையங்கள், இது தவிர இதற்கு முன் மத்திய/மாநில அரசாங்க மான்ய உதவிகளைப் பெற்ற தொழில் மையங்கள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவை அல்ல.
பிற தகுதி கோட்பாடுகள்

சிறப்புத்தகுதியுடையோர், அதற்கான மான்யத் தொகையை  பெற, உரிய அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் (ஜாதி சான்றிதழ்), மான்யத் தொகை கோரும் விண்ணப்பத்துடன் இணைத்து குறிப்பிட்ட வங்கியின் அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும்.
மான்யத் தொகை கோரும் விண்ணப்பத்துடன் எங்கு தேவையோ, அங்கெல்லாம் நிறுவனத்தின் செயல்பாடுகள், அதன் துணை விதிகளின் சான்றளிக்கப்பட்ட நகலை சேர்த்து சமர்பிக்க வேண்டும்.
திட்ட செலவு என்பது முதலீடு செலவு மற்றும் ஒரு முறை நடைமுறைப்படுத்த தேவைப்படும் செலவுகளை உள்ளடக்கியது. முதலீட்டு செலவில்லா திட்டங்களுக்கு நிதிஉதவி அளிக்கப்படமாட்டாது. நடைமுறை முதலீடு இல்லாத, 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான திட்டங்கள், மண்டல அலுவலகம் அல்லது வங்கிக் கிளையின் கட்டுப்பாட்டாளரின் தகுதி சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழுடன்தான், மான்ய உதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
திட்டமதிப்பில், நிலத்தின் மதிப்பை சேர்க்கக்கூடாது.  முன்னரே கட்டப்பட்ட கட்டிடம், குத்தகைக்கு எடுத்த கட்டிடம், வேலை பார்க்கும் கொட்டகைகளின் மதிப்பு/ வாடகை தொகையினை (அதிக பட்சம் 3 வருடங்கள்) திட்ட மதிப்பில் சேர்க்கலாம்.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டத்தில், புதிதாக உருவாக்கப்படும் லாபம் தரக்கூடிய எந்த சிறிய தொழில்நிறுவனங்களையும் தொடங்கலாம். ஏற்கனவே துவக்கப்பட்ட/பழைய நிறுவனங்களை சேர்க்க முடியாது.  இத்திட்டத்தின் கீழ் வராத கிராமப்புற தொழிலகங்களும் இதில்  சேர்த்துக் கொள்ளப்படாது.

குறிப்பு:
நிறுவனங்கள்/கூட்டுறவு சங்கங்கள்/பதிவுசெய்த சேவை நிறுவனங்கள்/சிறப்புத் தகுதியுடையோர்/சிறுபான்மையினர் நிறுவனங்கள்,  தங்களது நிறுவன துணை விதிகளில் இத்தகைய குறிப்பிட்ட வகை மக்களுக்கு செயலபடுவதாக கூறப்பட்டிருப்பின்,  சிறப்பு பிரிவினருக்கான மான்யத் தொகை பெறுவர். இவ்வாரு சிறப்பு பயனாளிகளுக்கான நிறுவனமாக பதிவு பெறாத நிறுவனங்கள், பொது பிரிவினருக்கான மான்ய உதவி மட்டும் பெறலாம்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.  குடும்பம் என்பது அந்த தனி நபர் அவரது மனைவியைக் குறிக்கும்.

செயல்படுத்தும் முகமைகள்

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டத்தை கதர் கிராமத் தொழில் ஆணையகம் (KVIC) செயல்படுத்தும்.  மும்பையிலிருக்கும் இந்நிறுவனம், கதர் கிராமத் தொழில் வாரியச் சட்டம் 1956ன்படி உருவாக்கப்பட்டது செயல்படுத்தும். தேசிய அளவில் இந்த ஒரு நிறுவனம் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்தும். மாநில அளவில், கிராமப் பகுதிகளில், கதர் கிராமத் தொழில் ஆணையத்தின் மாநில இயக்கமும், மாநில கதர் கிராமத் தொழில் வாரியங்கள் (KVIB) மற்றும் மாவட்ட தொழில் மையங்கள் இத்திட்டத்தை செயல்படுத்தும். நகர்ப்புறங்களில், மாவட்ட தொழில் மையங்கள் இதனை செயல்படுத்துகின்றன.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்க்கப்படாத தொழில்கள்

மாமிச உணவு சார்ந்த தொழில்கள்/வியாபார மையங்கள் (அதாவது, மாமிச உணவை பதப்படுத்துதல், அதனால் ஆன உணவு வகைகளை தயாரித்தல் போன்றவை), போதை பொருட்களான புகையிலை மற்றும் அவை சம்மந்தப்பட்ட பொருட்கள் தயாரிப்பு (பீடி, சிகரெட், பான் போன்றவை), மது வழங்கும் உணவகங்கள், மது வகைகள், பன மரத்திலிருந்து கள்ளு தயாரித்தல்
டீ, காபி, ரப்பர் சாகுபடி தொடர்புடைய தொழில்கள், பட்டுப்புழு வளர்ப்பு, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, பன்றி, கோழி வளர்ப்பு, அறுவடை இயந்திரம் போன்றவை.
சுற்றுக்சுழலுக்கு பாதிப்பு உருவாக்கும் பொருட்கள் தயாரிப்பு, பாலித்தீன் பைகள் (20 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக) தயாரிப்பு, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து உணவு பொருட்கள் வைக்க தயாரிக்கப்படும் பொருட்கள் போன்ற தொழில்கள்
கை நெசவுத்தொழில், கைத்தறி, கதர் திட்டத்தில் தள்ளுபடி பெற்ற நிறுவனங்கள் / தொழில்கள், பாஷ்மீனா கம்பளம் உற்பத்தி போன்றவை.
கிராமப்புற போக்குவரத்து (இதில் அந்தமானில் ஆட்டோரிக்ஷா, ஷிக்காராவில் படகு இல்லம், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப்படகு, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது).

மூலம்: www.kvic.org.in

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை