பெண்களுக்கான ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கும் அரசு...!

பெண்களுக்கான புதிய ஸ்வர்ணிமா திட்டம்: தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பெறுவதற்குப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். 

பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது பெண்களுக்கான புதிய பொற்கால திட்டத்தின் கீழ் (NEW SWARNIMA SCHEME FOR WOMEN) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சிறு வணிகம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

பெண்களுக்கான பொற்கால திட்டம்
பெண்களுக்கான பொற்கால திட்டம் ஆனது 2 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. அதுவும் ஆண்டு ஒன்றிற்கு வெறும் 5% வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.

மேலும், இந்த கடன் திட்டத்தில் , பயனாளிகள் பங்களிப்பு எதுவும் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓட்டு மொத்த கடன் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அத்தகைய நிபந்தனை ஏதும் இல்லை.

இந்த திட்டத்தின் கீழ், ரூ 2 லட்சம், வெறும் 5 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. மற்ற திட்டங்களின் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட குறைவானதாகும். மேலும், கடன் தொகையை, 3 முதல் 8 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்த அவகாசம் அளிக்கப்படுகிறது.

இதற்கு என்ன தேவை?

சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, சிறு வணிகம் செய்வதற்கான திட்ட அறிக்கை மற்றும் இதர வங்கி கோரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

எங்கே அணுகுவது?

அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் , மண்டல மேலாளர் (அல்லது) அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்/ நகர கூட்டுறவு வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.


கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை