தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என, கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்! இன்றே விண்ணப்பிக்கவும்! – [Free sewing machine]
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் 8ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை ஜனவரி 09 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனவும் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். பயனாளர்கள் ரேசன் கடைக்கு வரும் போது ஸ்மார்ட் கார்டுகளை கொண்டு வந்து கைரேகைகளை வைத்து பொருட்களையும் 1000 ரூபாய் ரொக்கத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என, கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகையை பெறுவதற்கான டோக்கன், நாளை முதல் 8 ஆம் தேதி வரை வினியோகம் செய்யப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, 1000 ரூபாயுடன் முழு கரும்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்ய வேண்டியிருப்பதால் ஜனவரி 03ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் கூறியிருந்தார். டோக்கனில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் தேதி, நேரம் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றிருக்கும். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க தமிழக அரசு உத்தரவிட்டதால் டோக்கன் வழங்க கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. அதைதொடர்ந்து, பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே நாளை முதல் பயனாளர்களின் வீடுகள் தோறும் நேரடியாகச் சென்று விநியோகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
அதில், தெரு அல்லது வரிசை வாரியாக டோக்கன் வழங்கவும், டோக்கனில் விபரங்களை சரியாக குறிப்பிட்டு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த நேரத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற குடும்ப அட்டைதாரர் கடைக்கு வர வேண்டும் என்பது அதில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. பயனாளர்கள் ரேசன் கடைக்கு வரும் போது ஸ்மார்ட் கார்டுகளை கொண்டு வந்து கைரேகைகளை வைத்து பொருட்களையும் 1000 ரூபாய் ரொக்கத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.