வில்லாளி வீரன் பாடல் வரிகள்

சரணம் சொல்லிக் கூப்பிடுவோம்
 சபரிமலை நாதனை
வரனும் என்று அழைத்திடுவோம்
 வரம் கொடுக்கும் ஈசனை
வில்லாளி வீரனே வீரமணி கண்டனே தமிழ்
சொல்லெடுத்துப் பாடுவோம் சுந்தரேசன் மைந்தனே
                               - வில்லாளி
கார்த்திகை மாதத்தில் மாலையிட்டோம் நாங்கள் உனைக் 
கண்ணாரக் காணும்வரை கண்ணுறக்கம் இல்லையே
                               - வில்லாளி
மாமலையில் வாழுகின்ற மணிகண்டசாமியே உனை
மனதார வேண்டுகிறோம் மனமிரங்க வில்லையா
                               - வில்லாளி
நீயிருக்கும் சபரியிலே இடமும் உண்டோ சொல்லையா
நீங்கா உந்தன் நினைவிருந்தால் அது போதுமே ஐயப்பா
                               - வில்லாளி
காடுமலை மெடெல்லாம் கடந்து நாங்கள் வந்தோம் 
காருண்யமூர்தியினைக் கண்ணாறக் காணவே
                              - வில்லாளி
ஏறாத மலையெல்லாம் ஏறிவரும் போதிலே
மலையேற்றி தந்திடுவாய் மன்னவனே மணிகண்டா
                              - வில்லாளி
மார்கழி மாத்தத்தில் இருமுடியே தாங்கியே
ஐயா உந்தன் மகரஜோதி கண்டிடவே வருகின்றோம் 
                              - வில்லாளி
இருமுடியை சுமந்துகிட்டு இன்பமுடன் புறப்பட்டோம் 
இன்ப துன்பன் சொந்தபந்தம் எல்லாமே நீ ஐயப்பா
                              - வில்லாளி
பம்பையிலே பிறந்து விட்ட பந்தளத்து மாமணியே
பாவி எனைக் காத்தருள்வாய் பார்புகளும் வேந்தனே
                              - வில்லாளி
அரிஹர புத்தரனே ஆறுமுகன் சோதரனே
ஆண்டவனே உன் தரிசனம் கிடைத்திடவும் வேண்டுமைய்யா
                               - வில்லாளி
தங்கத்திரு மேனியனே தவக்கோலம் கொண்டவனே
தரணியில் உண்னைவிட்டால் வேறுகதி யாருமில்லை
                                 - வில்லாளி
அங்கும் இங்கும் சரணகோஷம் கேட்குதய்யா ஐயப்பா
சாமியே ஐயப்பா சாமியே ஐயப்பா சாமியே ஐயப்பா

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை