துர்க்கா தேவி சரணம்
- ஜெய ஜெய தேவி
துர்க்கை அம்மனைத் துதித்தால் – என்றும்
துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளே
தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகள் ஓடும்
சர்வ மங்களம் கூடும்
- ஜெய ஜெய தேவி
பொற்கரங்கள் பதினெட்டும் – நம்மைச்
சுற்றிவரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்கும்ப் பொட்டும்
வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆயிரம் கண்கள் உடையவளே
ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே
தாய்போல் நம்மைக் காப்பவளே
- ஜெய ஜெய தேவி
சங்கு சக்கரம் வில்லும் அம்பும்
அங்குசம் வாளும் வேலும் சூலமும்
தங்க க்கைகளில் தாங்கி நீற்பாள்
சிங்கத்தின் மேலவள் வீற்றிருப்பாள்
தீங்களை முடிமேல் சூடி நின்றாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள்
மங்கையர்க் கரசியும் அவளே
அங்கயற் கன்னியும் அவளே
- ஜெய ஜெய தேவி
கனக துர்க்க தேவி சரணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்