சிம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி.. வருகிறது E-Sim.. ஆண்ட்ராய்டு போன் வைத்து உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு அப்டேட்டில் பலவிதமான புதுப்பிப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஆண்ட்ராய்டு 13 OS சமீபத்தில் வெளியானது. இனி சிம் கார்டு பயன்படுத்த வேண்டாம் என்று சில வாரங்களுக்கு முன்பு அப்டேட் வெளியானது. சிம் கார்டுகளுக்கு விரைவில் தேவை இல்லாமல் போய்விடும். ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் சில தேர்ந்தடுத்த நாடுகளில் சிம் கார்டுகள் இல்லாத ஐபோன்களை அறிமுகம் செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனைப் பொறுத்தவரை e-simமும் பயன்படுத்தும் அம்சம் பரிசோதனையில் இருக்கிறது. eSIM அல்லது சிம் கார்டா என்ற தேர்வில், இரண்டும் சேர்த்து பயன்படுத்தும் ஆப்ஷனும் வழங்க முடியுமா என்றும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு ஃபோனில் இருந்து மற்றொரு ஃபோனுக்கு தங்களுடைய ஈ-சிம்மை மாற்ற முடியும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

சமீபத்தில் வெளியான ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனில் ஏற்படக்கூடிய மாற்றங்களில், இந்த அம்சங்கள் விரைவில் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஆண்ட்ராய்டு 13 பீட்டா வெர்ஷன் பற்றி வெளியான அறிக்கையில், ஒரு சாதனத்தில் இருந்து மற்றொரு சாதனத்துக்கு eSIM கணக்குகள் மாற்ற முடியும், அது மட்டுமல்லாமல், டிஜிட்டல் கணக்கையும் முழுவதுமாக மாற்ற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இவை எல்லாம் எதிர்காலத்தில் தான் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிம் ஸ்லாட்டுகளை நீக்கி, சிம் கார்டு தேவையில்லாத நிலை ஏற்பட்டால், மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். எனவே, இந்த OS வெர்ஷனில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படலாம்
இதைத் தவிர்த்து, eSIM என்பது மிகப்பெரிய வணிகம். ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அதை கையில் எடுத்த நிலையில், ஆப்பிளை விட மிக அதிக எண்ணிக்கையில் உலகம் முழுவதும் யூசர்களைக் கொண்டுள்ள ஆண்ட்ராய்டு தளத்துக்கு வருமானம் என்ற ரீதியில் மட்டுமின்றி, தொழில்நுட்பத்தில் சமீபத்திய அம்சங்களை பயன்படுத்தவும் இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

இவை சாத்தியமானால், நிறுவனம் தனது செயல்பாட்டில் துரிதமாக எந்த தடை மற்றும் தாமதமின்றி செயல்பட வேண்டும். இதற்கு ஆப்பிள் நிறுவனமே மிகப்பெரிய உதாரணம்! மிக வேகனாக eSIM ஆக்டிவேஷனை ஐஃபோன் யூசர்களுக்கு வழங்கியது. அதே போல, ஆண்ட்ராய்டு போன்களுக்கு இனி eSIM தான் என்பதை உறுதி செய்தால், பல கட்ட செயல்பாடுகளை சீராக்கி, குழப்பங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம்.
மேலும், பீட்டா வெர்ஷன் பற்றிய அறிக்கையில், eSIM பயன்பாடு அறிமுகம் செய்தால், முதலில் கூகுள் நிறுவனம் தனது பிக்சல்கள் மற்றும் கூகுள் மொபைல் சேவைகள் சாதனங்களுக்கு அறிமுகம் செய்யும், அல்லது கட்டுப்படுத்தும் என்று கூறியுள்ளது
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்