தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்.மாநில சங்கத்தின் அறைகூவலின்படி,
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% பணி கொடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி
ராதாபுரத்தில் தோழர். மரிய கொரட்டி ராதாபுரம் ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட துணை தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தை வாழ்த்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர். குட்டன் உரையாற்றினார்.
ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ராதாபுரம் ஒன்றிய தலைவர் தோழர்.உதயம் சுரேஷ் வாழ்த்தி பேசினார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராதாபுரம் ஒன்றிய செயலாளர் தோழர் ரா.மெ. கிறிஸ்டோபர் நிறைவுரையாற்றினார்.
ஒன்றிய துணைத் தலைவர் தோழர்.ச. ஆனந்தம்மாள் நன்றி கூறினார்
ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்