வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அதை ஒரே இணைப்பாக மாற்ற வேண்டும் என்று மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: வீடுகளில், ஒரு குடும்பத்தில் அல்லது குடியிருப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அதை ஒரே இணைப்பாக மாற்ற வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ந்தேதி கட்டண விகித பட்டியல் வெளியானது.
இந்த பட்டியலில் உள்ள பிரிவின் படி ஒரு வீட்டில் அல்லது ஒரு குடியிருப்பில் அல்லது ஒரு இடத்தில் இரண்டு மின் இணைப்புகளை வழங்குவது குறித்தும் ஏற்கனவே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் அவற்றை இணைப்பது குறித்தும் மின்வாரியத்துக்கு அறிவுறுத்தி இருந்தது.
ஒரு இடத்திற்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே
இதன் படி ஒரு வீடு அல்லது ஒரு குடியிருப்பு அல்லது ஒரு இடத்திற்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். ஒன்றுக்கு மேல் மின் இணைப்பு இருந்தால் அதை கட்டண விகித பட்டியலின் படி 1ஏ-ல் ஒரே மின் இணைப்பாக உரிய நோட்டீஸ் கொடுத்து மாற்ற வேண்டும். மின் நுகர்வோர் இணைப்பதற்கு முன்வராத பட்சத்தில் அதை 1-டி கட்டண விகித பட்டியலாக மாற்ற வேண்டும்.
தனியாக குடும்ப அட்டை
மின் வாரியம் மின் இணைப்பு கொடுக்க அந்த பகுதியில் உள்ள வாடகை ஒப்பந்தம் அல்லது குத்தகை ஒப்பந்தம் உள்ளிட்டவை இருக்க வேண்டும். ஒரே வீட்டில் சொந்தபந்தங்கள் ஒன்றாக இணைந்து தனித்தனி குடும்பமாக வாழும் பட்சத்தில், அங்கு வாடகை ஒப்பந்தமோ, குத்தகை ஒப்பந்தமோ வருவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, இதுபோன்ற ஒன்றாக வாழும் குடும்பங்கள் உள்ள உரிய முறையில் பிரிக்கப்பட்டு இருக்கும் குடியிருப்பில் கூடுதலாக மின் இணைப்பு 2004 மின் பகிர்மான விதியின் படி பெற்றிருந்தால் அந்த இடத்தில் தனியாக குடும்ப அட்டை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
100 யூனிட் மின்சாரம்
100 யூனிட் மின்சாரம் முறையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடைமுறை செய்யப்படுகிறது. மேலும் வீடுகளில், குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார இணைப்பு 1-டி கட்டண விகித பட்டியலாக மாற்றப்பட வேண்டும். ஒரு குடும்பத்தினர் இருக்கும் வீடு அல்லது இடம் அல்லது குடியிருப்பில் கூடுதலாக இருக்கும் மின்சார இணைப்புகளை ஒன்றாக சேர்க்க வேண்டும்.
ஒரே ஒரு மின்சார இணைப்பு மட்டுமே
இல்லாவிடில், அவை 1டி கட்டண விகித பட்டியலாக மாற்றம் செய்ய வேண்டும். அதாவது ஒரு குடும்பத்தில் அல்லது வீட்டில் அல்லது குடியிருப்பில் ஒரே ஒரு மின்சார இணைப்பு மட்டுமே 1ஏ-வில் கட்டண விகித பட்டியலாக இருக்க வேண்டும். இவற்றினை முறையாகவும் தெளிவாகவும் ஆய்வு செய்து பின்னர் அமல்படுத்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்