வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் வறுமையிலிருந்து விடுபட சுய உதவிக்குழுக்கள் மூலம் தொழில் தொடங்குவதற்கு பல கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

 

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தினால் மகளிரின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக பின்வரும் திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் செயல்படுத்தி வருகிறது.ஊரக ஏழை மக்களுக்கான வலுவான உயிரோட்டத்துடன் கூடிய அமைப்புகளை உருவாக்கி நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத பல்வேறு சேவைகளையும் முறையாகப் பெற வழிவகை செய்து வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத்தைப் பெருக்குவதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது கீழ்க்கண்ட மூன்று முக்கிய குறிக்கோள்களை அடிப்படையாக கொண்டு ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயல்களை மேற்கொள்கிறது.வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைகள் மற்றும் மிகவும் ஏழைகளை மக்கள் பங்கேற்புடன் கண்டறிந்து அவர்களில் மகளிர் சுய உதவிக் குழுவில் இதுவரை இணையாதவர்களை குழுக்களாக அல்லது குழுக்களில் ஒருங்கிணைத்தல்.கிராமப்புற ஏழைகளுக்கான வலுவான உயிரோட்டத்துடன் கூடிய மக்கள் அமைப்புகளை உருவாக்கி அவற்றை நிலைத்த தன்மையுடன் செயல்பட வைத்தல்.இலாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் குடும்ப வருமானத்தை உயர்த்தி வறுமையிலிருந்து விடுபடச் செய்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக பாளையங்கோட்டை, நான்குநேரி, வள்ளியூர், இராதாபுரம், கடையம் மற்றும் கீழப்பாவூர் வட்டாரங்களிலும் மூன்றாம் கட்டமாக அம்பாசமுத்திரம், ஆலங்குளம், சேரன்மகாதேவி, களக்காடு, பாப்பாகுடி, தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் புதுவாழ்வு திட்டம் செயல்பாட்டில் இருந்த சங்கரன்கோவில் மானூர், மேலநீலிதநல்லூர், குருவிகுளம், கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய வட்டாரங்களில் ஜுலை 2017 முதல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

சுய உதவிக் குழுக்கள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க செயல்பாடுகளின் துவக்கமாக ஊரக பகுதிகளில் உள்ள சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள இலக்கு மக்கள் குடும்பங்களை கண்டறியும் நோக்கத்துடன் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்கள் நிலை ஆய்வு பணி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து 425 ஊராட்சிகளிலும் முடிக்கப்பட்டுள்ளது.மேற்படி மக்கள் நிலை ஆய்வு மூலம் 114706 குடும்பங்கள் சமூக பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய அல்லது இலக்கு மக்கள் குடும்பங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.மக்கள் நிலை ஆய்வின் மூலம் இலக்கு மக்கள் குடும்பங்கள் என கண்டறியப்பட்ட குடும்ப உறுப்பினர்களை கொண்டு 2728 புதிய இலக்கு மக்கள் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு 951 எண்ணிக்கையிலான சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர ஏற்கனவே ஊரக பகுதிகளில் செயல்பாட்டில் இருந்த 2687 சுய உதவிக் குழுக்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

சுழல்நிதி / ஆதார நிதி :

இலக்கு மக்கள் குடும்ப உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்ட இலக்கு மக்கள் சுய உதவிக் குழுக்களின் நிதி ஆதாரங்களை வலுப்படுத்திடவும் எளிய முறையில் வங்கி கடன் கிடைக்க செய்திடும் ஏதுவாகவும் புதிதாக அமைக்கப்பட்ட 2158 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.415.00 இலட்சம் சுழல்நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு :

சுய உதவிக் குழுக்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியில் தற்சார்பு அடையச் செய்திடும் நோக்கத்துடனும் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை வலுப்படுத்தி சுய உதவிக் குழுக்களின் நிதிசார்ந்த தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்திடும் விதமாகவும் ஒரு ஊராட்சியில் செயல்பாட்டில் உள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களையும் ஒருங்கிணைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மக்கள் அமைப்பானது அனைத்து 425 ஊராட்சிகளிலும் மகளிர் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 425 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கும் ஊக்கநிதியாக தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.425.00 இலட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 156 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு சுய உதவிக் குழுக்களின் நிதி தேவையினை பூர்த்தி செய்திடும் முகமாக அமுத சுரபி நிதியாக 1868.67 இலட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோருக்கான தனிநபர் கடன் :

மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் உறுப்பினர்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்திடவும் அவர்களை சுய தொழில் முனைவோராக மாற்றிடும் விதமாக தனிநபர் கடனாக 8657 மாற்றுத்திறனாளி உறுப்பினர்களுக்கு ரூ.1298.55 இலட்சமும் நலிவுற்ற குடும்பங்களை சார்ந்த 8943 உறுப்பினர்களுக்கு ரூ.1341.45 நிதியும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோருக்கான தனிநபர் கடன் :

மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் உறுப்பினர்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்திடவும் அவர்களை சுய தொழில் முனைவோராக மாற்றிடும் விதமாக தனிநபர் கடனாக 8657 மாற்றுத்திறனாளி உறுப்பினர்களுக்கு ரூ.1298.55 இலட்சமும் நலிவுற்ற குடும்பங்களை சார்ந்த 8943 உறுப்பினர்களுக்கு ரூ.1341.45 நிதியும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது.

சமூக தணிக்கை குழு :

கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வழங்கப்படும் வாழ்வாதார இயக்க நிதியின் பயன்பாடு மற்றும் மக்கள் அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணித்திடும் விதமாக சமூக தணிக்கை குழு என்ற சுய சார்புடைய மக்கள் அமைப்பானது அனைத்து 425 ஊராட்சிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.

வங்கி கடன் இணைப்பு :

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க நிதி தவிர சுய உதவிக் குழுக்களின் பொருளாதார கடன் தேவைகளை பெறுமளவில் பூர்த்தி செய்திடும் பொருட்டு வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தகுதியான சுய உதவிக் குழுக்களுக்கும் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் ரூ.1351.49 கோடி வங்கி கடனாக வழங்கப்பட்டுள்ளது.

வட்டி மானியத் திட்டம் :

தவணை தவறாமல் குறித்த காலத்தில் வாங்கிய கடனை திரும்பச்செலுத்தும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன்கள் கிடைக்க செய்திடும் விதமாக “வட்டி மான்ய திட்டம்” தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் சுய உதவிக் குழுக்கள் பெறும் ரூ.3.00 இலட்சம் வரையிலான வங்கி கடன்களுக்கு வங்கிகளால் விதிக்கப்படும் வட்டி விகித்தில் 7% வட்டி தவிர மீதமுள்ள வட்டி தொகையானது வட்டி மானியமாக விடுவிக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 3637 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.53.39 இலட்சம் வட்டி மானியத் தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

ஒத்த தொழில் குழுக்கள்

சுய உதவிக் குழு உறுப்பினர்களை தொழில் முனைவோராக உருவாக்கிடும் பொருட்டு ஊராட்சி பகுதிகளிலும் ஓரே தொழில் ஈடுபட்டு வரும் 20 முதல் 30 உறுப்பினர்களை கொண்ட ஒத்த தொழில் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 251 தொழில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்கட்டமைப்பு நிதியாக ரூ.199.38 இலட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

வட்டார அளவிலான கூட்டமைப்பு :

அனைத்து வட்டாரங்களிலும் வட்டார அளவில் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்திடவும் மக்கள் அமைப்புகளை மேலும் வலுவுள்ளதாக மாற்றிடும் விதமாக வட்டார அளவில் சங்கங்கள் பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வட்டார அளவிலான கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது...

மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில் 

எங்களுடன் இணைந்து இருங்கள்

Facebook | Twitter | Play Store 

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 

Download Now 

Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்