இராதாபுரம் தாலுகா அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
இருக்கன்துறை பஞ்சாயத்து உட்பட்ட விவசாய நிலங்களையும், விவசாயிகளையும், மற்றும் குடியிருப்பு பகுதிகளை பாதிக்கக்கூடிய கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது.
கல்குவாரிகளில் இருந்து வரும் கனரக வாகனங்களை கிராம சாலையில் செல்ல அனுமதிக்க கூடாது.
அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துபவர்களை அந்த நிலங்களிலிருந்து வெளியேறச் செய்யும் முயற்சியை கைவிட வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாத சங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மற்றும் கல் குவாரி எதிர்ப்பு போராட்டக் குழு ஆகியவற்றை சேர்ந்த 100 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.மாயகிருஷ்ணன் மாவட்ட செயலர் விவசாய சங்கம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் தோழர்.ஸீரிராம் துவக்கி வைத்தார்.
தோழர்கள் ரா.மெ.கிறிஸ்டோபர் ராதாபுரம் தாலுகா செயலாளர், சுப்பிரமணியன்,பூமாலை விவசாய சங்க கிளை செயலாளர்கள் மற்றும் தோழர்.அமுதா ஒன்றிய செயலாளர் ஜனநாயக மாதர் சங்கம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
தோழர்.கே.பி.பெருமாள் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொருளாளர் நிறைவுரையாற்றினார்.
முடிவில் தோழர்.செ.ரஜினி தாலுகா குழு உறுப்பினர் ராதாபுரம் நன்றி உரையாற்றினார்.
தாசில்தாரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்