ஆட்டு பண்ணை தொடங்குவது எப்படி..?

தற்போது விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு தொழிலும் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. உலகில் அதிக லாபம் ஈட்டும் பிசினஸில் ஆட்டுப் பண்ணையும் ஒன்று. கால்நடை வளர்ப்பைப் பொறுத்தவரை, அதிக லாபம் தரும் பண்ணைத் தொழிகளில் ஒன்று.

ஆட்டு பண்ணை அமைக்கவும், அதற்கான முதலீட்டுத் தொகை அல்லது கடன்களை எப்படி வாங்குவது பற்றிய முக்கிய விஷயங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

ஆட்டு பண்ணை தொடங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

இளம் தலைமுறை

இன்றைய தலைமுறையினருக்கு ஆடு வளர்ப்பு பற்றி முழுமையாக தெரியுமா என்பது சந்தேகம் தான். 90 களில் பிறந்தவர்கள் வரை மட்டுமே ஆடு வளர்ப்பது பற்றி நேரடியாக பார்த்து வளர்ந்திருப்பர். இந்நிலையில், புதிதாக ஆடுகளை வளர்க்க விரும்பி, நிதி நெருக்கடியால் துவங்க முடியாமல் தவிக்கும் மக்கள் ஏராளம். இத்தகைய சூழ்நிலையில் ஆடு பண்ணை தொடங்க கடன் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

அரசு கடன் உதவி!

ஆடு வளர்ப்புக்கு கடன் கிடைக்கும் என்பது வெகு சிலருக்கே தெரியும். ஒரு விவசாயி அல்லது வேலையில்லாத இளைஞர்கள் 20 ஆடுகளை வளர்க்க விரும்பினால், அவர்கள் அரசிடம் கடன் மற்றும் மானியம் பெறலாம். அதற்கு ஆடு வளர்ப்பு திட்ட அறிக்கையில் ஆடுகள் எங்கு வளர்க்கப்படுகிறது என்று குறிப்பிட வேண்டும். ஆடு வளர்ப்புக்குப் பயன்படுத்தப்படும் நிலத்தை நீங்கள் சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கு எடுத்தோ கூட பண்ணையைத் தொடங்கலாம்.

செலவுகள்

மேலும், ஆட்டு பண்ணைக்கு எவ்வளவு நிலம் பயன்படுத்தப்படும், ஆட்டு தொழுவத்தை கட்ட எவ்வளவு செலவாகும் போன்ற முழுமையான தகவல்களை குறிப்பிடுவது மிக அவசியம்.

ஆடு வளர்ப்புக்கு நபார்டு வங்கி (NABARD Bank) குறிப்பிட்ட கடன்களை வழங்குகிறது. வங்கியில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த கடனின் அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 15 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முழு விபரம்

மேலும் தகவலுக்கு, நபார்டு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும், கூடுதலாக, நீங்கள் விலங்குகள் நலத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் போதுமான தகவல்களை பெற முடியும். மேலுக் கால்நடைகளை மேம்படுத்த இந்திய அரசும் 35% வரை மானியம் வழங்குகிறது.

மருத்துவ பராமரிப்பு!

கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி, ஆடுகளுக்கு ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிபோட வேண்டும். இது ஆடு வளர்ப்பில் மிகவும் முக்கியமான ஒன்றாகும், இது சரியாகவும், முறையாகவும் செய்யாத பட்சத்தில் ஆடுகள் நோய்வாய்பட்டு இறக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஆட்டு பண்ணை அமைக்க தேவைப்படும் இடம்!

ஒரு ஆட்டுக்கு 12 சதுர அடியும், 20 ஆடுகளுக்கு 240 சதுர அடியும் நிலம் தேவைப்படும். ஒரு ஆட்டுக்குட்டிக்கு 8 சதுர அடி நிலமும், 40 ஆட்டுக்குட்டிகளுக்கு 320 சதுர அடி நிலமும் இருக்க வேண்டும். குறிப்பாக அந்த நிலம் நீர்வசதி உள்ள விவசாய நிலமாக இருக்க வேண்டும். இவை அனைத்தும் நீங்கள் தயாரிக்கும் திட்ட அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும்.

500 ஆடுகள்

நீங்கள் 500 ஆடு வளர்க்க வேண்டும் என்றால் உங்களிடம் ஏழு ஏக்கர் நிலம் அவசியம் இருக்க வேண்டும். அதே 500 ஆடுகள் வளர்த்து விற்பனை செய்தால் 20 லட்சம் ரூபாய் வரையில் வருவாய் ஈட்ட முடியும், ஆனால் இதில் அதிகப்படியான செலவுகளும் உள்ளது.

சவால்

இதேபோல் வளர்த்த ஆடுகளை சரியான நேரத்தில் சரியான விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயமும் உள்ளது. எந்த தொழிலும் எளிதானது இல்லை என்பது போல, இதிலும் அதிகப்படியான சவால்கள் உள்ளது.

இதோடு ஆட்டு பண்ணை வளர்ப்பில் முன் அனுபவம் இருக்கும் ஊழியர்களை வைத்துக்கொண்டு செயல்படுவது மிகவும் சிறந்த யோசனையாக இருக்கும்.

மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில் 

எங்களுடன் இணைந்து இருங்கள்

Facebook | Twitter | Play Store 

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 

Download Now 

Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்