நெல்லை: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப தகுதிகள் 01.01.2022 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும் ஆண்டு வருவாய் ரூ 72, 000/க்குள் இருக்க வேண்டும்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் ( Online ) ல் பெறப்பட்ட வருமான சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும் இதற்கான விண்ணப்பபடிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சி துறையின் வலைத்தளத்திலோ (https://tamilvalarchithurai.tn.gov.in/) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகையாக ரூ:3500/மருத்துவ படி ரூ.500/ அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மண்டல தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அலுவலகத்தில் 31:03:2023 க்குள் அளிக்கப்பட வேண்டும் எனவும் நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் அவர்கள் கூறியுள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் திருநெல்வேலி