இத்திட்டத்தில் மின் மோட்டார் குதிரை திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 3.60 லட்சம் மானியத்தில் ஆதி திராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும் பழங்குடியினர்களுக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்காகவும் விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைத்திருக்க வேண்டும் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி மற்றும் பகிரங்கமான களத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும் துரித மின் இணைப்பு திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளர் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 ஹெச்பி குதிரை திறன் மின் இணைப்பு கட்டணம் ரூபாய் 2.50 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூபாய் 25 ஆயிரம் 7.00 குதிரை திறன் கொண்ட மின் இணைப்பு கட்டணம் ரூபாய் 2.75 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூபாய் 27 ஆயிரத்து 500 ரூபா 10 எச்பி குதிரை திறன் மின் இணைப்பு கட்டணம் ரூபாய் 3.00 லட்சத்திற்கான 10 சதவீதம் பயனாளிகள் பங்கு தொகை ரூபாய் 30000 15 ஹச்பி குதிரை திறன் மின் இணைப்பு கட்டண ரூபாய் 4.00 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்கு தொகை 40 ஆயிரத்திற்கான வங்கி வர ஓலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் தகுதியில்லாத விண்ணப்பத்தின் பங்குத்தொகை 10 சத விகிதம் திரும்பி அளிக்கப்படும்.
கடந்த 2017 ஆம் முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளர் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளுக்கும் தற்போது மேற்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10% பயனாளி பங்கு தொகையுடன் புதிய விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்
இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் https://www.tahdco.com/ என்ற இணையதளத்தில் நிலத்தின் சிட்டா, அடங்கள், நகல் அ பதிவேடு நகல் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம் சர்வே எண் மின்வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும் மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்ளலாம்.
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்