வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள புதிய க்ரூப் செட்டிங்!
வாட்ஸ்அப்பிற்கு கிடைத்துள்ள லேட்டஸ்ட் அப்டேட்டின் வழியாக, வாட்ஸ்அப் க்ரூப்பில் அப்ரூவ் நியூ பார்ட்டிசிபென்ட்ஸ் (Approve New Participants) என்கிற புதிய க்ரூப் செட்டிங் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் பெயர் குறிப்பிடுவது போலவே இது முழுக்க முழுக்க க்ரூப் அட்மின்களுக்கான (Group Admin) ஒரு அம்சமாகும்.
அப்ரூவ் நியூ பார்ட்டிசிபென்ட்ஸ் அம்சத்தின் பயன் என்ன?
இந்த புதிய அம்சத்தின் வழியாக ஒவ்வொரு க்ரூப் அட்மின்களாலும், தங்களது க்ரூப் சாட்டில் இணையும் புதிய ஆட்களை (அதாவது புதிய மெம்பர்களை) எளிமையாக நிர்வகிக்க / கட்டுப்படுத்த முடியும். இந்த அம்சம் இயக்கப்பட்டிருக்கும் போது, உங்களிடம் க்ரூப் இன்வைட் லிங்க் (Group invite link) இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட க்ரூப்பில் இணைவதற்கு அந்த க்ரூப்பின் அட்மினிடம் அனுமதி (Approval) வாங்க வேண்டி இருக்கும்.
யாருக்கெல்லாம் இந்த புதிய வாட்ஸ்அப் செட்டிங் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?
அப்ரூவ் நியூ பார்ட்டிசிபென்ட்ஸ் என்கிற புதிய அம்சமானது, ஒரு க்ரூப்பில் யார்லால் சேர வேண்டும் யாரெல்லாம் சேர கூடாது என்பதை கட்டுப்படுத்த விரும்பும் க்ரூப் அட்மின்களுக்கும் மற்றும் அதிக எண்ணிக்கையிலான மெம்பர்களை கொண்ட பப்ளிக் கம்யூனிட்டிகளுக்கும் (Public Communities) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வாட்ஸ்அப்பின் எந்த வெர்ஷனில் இந்த புதிய க்ரூப் செட்டிங் கிடைக்கிறது?
வாட்ஸ்அப்பின் இந்த புதிய 'அப்ரூவ் நியூ பார்ட்டிசிபென்ட்ஸ்' அம்சமானது, ஆப்பிள் ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டுக்கான (Android) வாட்ஸ்அப் பீட்டாவின் லேட்டஸ்ட் வெர்ஷன் (Latest WhatsApp Beta Version) வழியாக அணுக கிடைக்கிறது. கூடிய விரைவில் இது அனைத்து பயனர்களையும் வந்தடையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
அப்ரூவ் நியூ பார்ட்டிசிபென்ட்ஸ் அம்சத்தை ஆன் செய்வது எப்படி?
நீங்களொரு வாட்ஸ்அப் பீட்டா யூசராக இருந்தால் (அதேசமயம் ஒரு க்ரூப்பின் அட்மின் ஆக இருந்தால்) இந்த புதிய க்ரூப் செட்டிங்கை வாட்ஸ்அப்பின் க்ரூப் செட்டிங்ஸ் (Group Settings) வழியாக அணுகலாம். க்ரூப் செட்டிங்ஸில் அப்ரூவ் நியூ பார்ட்டிசிபென்ட்ஸ் என்கிற அம்சத்தை காண்பீர்கள். அதை வெறுமனே ஆன் செய்தால் போதும்!
வாட்ஸ்அப்பிற்கு கூடிய விரைவில் வரவுள்ள வேறு சில புதிய அம்சங்கள்
புதிய க்ரூப் செட்டிங்குடன் சேர்த்து வாட்ஸ்அப் பீட்டாவில் 21 புதிய ஈமோஜிக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, விண்டோஸ் பீட்டாவிற்கான மல்டி செலெக்ஷன் (Multi-Selection), புஷ் நேம் வித்தின் சாட் லிஸ்ட் (Push name within chat list), புதிய டெக்ஸ்ட் எடிட்டர் (Text Editor), க்ரூப்களுக்கான காலாவதியாகும் தேதி (Expiration date for groups), ம்யூட் கால்ஸ் (Mute Calls), ஸ்பிலிட் வியூ (Spilt View), ஸ்டிக்கர் மேக்கர் டூல் (Sticker Maker Tool) என பல அம்சங்கள் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன!