தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் விரைவில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த “ஓராண்டாக எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி, அதன் 54 கிளைகள் மற்றும் அனைத்து 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அதன் 922 கிளைகள் என அனைத்திலும் IMPS (Instant Money Payment System) கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனைத்து தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.