இராதாபுரத்தில் DYFI சார்பாக கபாடி போட்டி நடைப்பெற்றது



இராதாபுரம் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இராதாபுரம் தாலுகா குழு சார்பாக மாணவர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக 
இலவச spoken English வகுப்புகள் , விளையாட்டுப் போட்டிகள், இலவச டியூசன் ,  கலை நிகழ்ச்சிகள்  என பல சமூக சேவைகளை செய்து வருகிறார்கள்.


மாவீரன் பகத்சிங் நினைவு

மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு, DYFI இராதாபுரம் தாலுகா குழு சார்பில் 60 கிலோ எடைப்பிரிவுக்கான திருநெல்வேலி மாவட்ட அளவிலான மாபெரும் மின்னொளி போட்டி நடைபெற்றது.


DYFI இராதாபுரம் தாலுகா தலைவர் தோழர் உதயம் சுரேஷ் மற்றும் கபாடி வரவேற்பு குழு தலைவர் சுபராஜ் தலைமை தாங்கினார்.
தாலுகா செயலாளர் தோழர் லெனின் ராஜா, பொருளாளர் தோழர் இசை முருகன் துணைச் செயலாளர் சிவா, தோழர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

இராதாபுரம் காவல் ஆய்வாளர் உயர்திரு. வள்ளிநாயகம் அவர்கள் போட்டினை துவங்கிவைத்தார்.

முன்னாள் Dyfi மாநில தலைவர் தோழர் ரெஜிஸ் குமார், மாநில இணைச் செயலாளர் தோழர் எட்வின் பிரைட், மாவட்டத் தலைவர் தோழர் குட்டன், மாவட்டச் செயலாளர் தோழர் ஸ்ரீராம் வாழ்த்துரை கூறினர்.
மாவட்ட பொருளாளர் தோழர் அருள்,தோழர் ரமேஷ் கன்னியாகுமரி,தோழர் கணேசன் களக்காடு ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக இராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன் விஜயாபதி ஒன்றிய கவுன்சிலர் ஆவுடை பாலன், தோழர் ராபர்ட், கலைச்செழியன் நக்கனேரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .

வெற்றி பெற்ற அணியினர்

1ம் பரிசு - ரூபாய் 10000 தோழர் அசோக் 2 சமூகம் அணியினர்
2ம் பரிசு - ரூபாய் 7500 தோழர் அசோக் சமூகம் 1 அணியினர்
3ம் பரிசு - ரூபாய் 5000 காவை GKC அணியினர்
4ம் பரிசு - ரூபாய் 4000 நக்கனேரி சுபா அணியினர்.
5 முதல் 8 வரை ரூபாய் 1000
5ம் பரிசு - இளையநயினார்குளம் அணியினர் 
6ம் பரிசு - இசிகா மொபைல்ஸ் அணியினர்
7ம் பரிசு - VP நாங்குநேரி அணியினர்
8ம் பரிசு - செண்பகலிங்கபுரம் அணியினர்
வெற்றி அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற கபடி குழு அணிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இராதாபுரம் தாலுகா குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கப்பட்டது
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் 
இராதாபுரத்தில் மின்னொளி கபடி போட்டி நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில் 

எங்களுடன் இணைந்து இருங்கள்

Facebook | Twitter | Play Store 

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 

Download Now 


Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்