நீங்களும் ஆரம்பிக்கலாம் இ-சேவை மையம் - தமிழக அரசு அறிவிப்பு


தமிழக மின்னணு நிறுவனம் மற்றும் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு வரிகள், கட்டணங்களையும் செலுத்தமுடியும்.


இது மட்டுமல்ல, மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள இ.சேவை மையங்களில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ், வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணபிக்க முடியும். மக்கள், அரசு அலுவலகங்களுக்கு சென்று சிரமப்படுவதை தடுக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையம் மூலம் மக்கள் இணையம் வழியாக அனைத்து அரசு நலன்களையும் பெற முடியும்.

தமிழகத்தில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு அரசு வழிவகை செய்துள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில்முனைவோர்களையும் ஊக்குவகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் புதிய மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்கி வருகிறது.

இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. இணையத்தில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இந்த திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலைப் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்  www.tnesevai.tn.gov.in , tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தவும். ஏப்ரல் 14-ம் தேதி வரை காலை 11.30 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3000. நகர்ப்புறத்திற்கான கட்டணம் ரூ.6000 ஆகும்.

இந்த விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு உரிய பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் வழங்கப்படும்.

இந்த இ-சேவை மையம் தொடங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில் 

எங்களுடன் இணைந்து இருங்கள்

Facebook | Twitter | Play Store 

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 

Download Now 

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை