இந்தியா முழுக்க யூபிஐ பயன்பாடு தற்போது உச்சம் தொட்டுள்ளது. உலகில் அதிக அளவில் யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போதுதான் வென்மோ போன்றவைகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா காலத்தில் இருந்தே யுபிஐ பயன்பாடு உச்சத்தில் உள்ளது.
சேவைகள்
அனைத்து விதமான சேவைகளுக்கும் தற்போது யுபிஐ பயன்பாடு வந்துவிட்டது. பெரிய பெரிய நிறுவனங்கள் தொடங்கி சாதாரண சாலையோர கடைகளுக்குகூட யுபிஐ வந்துவிட்டது. அதேபோல் பெரிய பெரிய அரசு நிறுவனங்கள் கூட யுபிஐ பயன்பாட்டை தொடங்கிவிட்டன. இன்னொரு பக்கம் ஆன்லைன் பேமெண்ட் அனைத்தும் தற்போது யுபிஐ சேவையை வழங்குகின்றன. மக்கள்ம் யுபிஐ பயன்பாட்டை வெகுவாக விரும்ப தொடங்கிவிட்டனர்.
கட்டணம்
இந்த நிலையில் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே வங்கிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கு சிறிய அளவிலான சேவை வரிகளும் கூட விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட அளவிலான பரிவர்த்தனைக்கு மேல் மாதம் செய்கையில் வங்கியில் இருந்து அதற்கான பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது வணிக பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. யுபிஐ மூலம் பிபிஐ மோடில் வணிக பரிவர்த்தனைக்கு பணம் அனுப்பினால் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2000ன் ரூபாய்க்கு மேல் பிபிஐ முறையில் பணம் அனுப்பினால் இந்த கட்டணம் பொருந்தும்.
UPI
அதன்படி வணிக பரிவர்த்தனைக்கு ஒரு கடைக்காரர் ப்ரீபெய்டு முறையில்.. அதாவது வாலாட் முறையில் பணம் செலுத்தினாலோ, ப்ரீபெய்டு கார்ட் முறையில் பணம் செலுத்தினாலோ அதற்கான 0.5 சதவிகிதம் முதல் 1.1 சதவிகிதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். மக்கள் சிலர் இப்போதே வாலட் மூலம் கட்டணம் செலுத்துகிறார்கள். இந்த வாலட் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு அதிகபட்சம் 1.1 சதவிகிதம் வரை கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. துறை ரீதியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் சதவிகிதம் மாறும். எரிபொருளுக்கு 0.5%, தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் 0.7%, பல்பொருள் அங்காடிக்கு 0.9%, Mutual Fund, அரசு, காப்பீடு, ரயில்வேக்கு 1% ஆக கட்டணம் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
கட்டணம்
இது வணிக பரிவர்த்தனைக்கு மட்டும் பொருந்தும். ஒரு கஸ்டமர் வாலட் மூலம் கட்டணம் செலுத்தினால், இந்த கூடுதல் கட்டணம் கடைக்காரரிடம் இருந்து பெறப்படும். பொதுமக்களிடம் இருந்து பணம் பெறப்படாது. ஆனால் வரும் நாட்களில் இந்த கட்டணத்திற்கான மறைமுக கட்டணம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட வாய்ப்புகள் உள்ளன. நேரடியாக கடைக்காரரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் மறைமுகமாக இதற்கான சேவை கட்டணம் வசூலிக்கப்படும். யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே வங்கிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதையடுத்தே என்பிசிஏ இந்த விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது.
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்