வெற்றிமாறனின் இயக்கம், சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்திருப்பது, விஜய் சேதுபதி கதாபாத்திரம் என்ன? இளையராஜாவின் இசை என விடுதலை 1 படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
அத்தகைய எதிர்பார்ப்பை விடுதலை திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா?
விடுதலை.........
வர்க்கப்பகைமைகள் இணக்கம் காண முடியாததன் விளைவே அரசு. போலிஸ் ராணுவம் போன்றவை பெருமுதலாளிகளின் நலன்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கருவிகள். இதுதான் விடுதலை படத்தின் மையச்சரடு.
மக்கள் படை எனும் அதிதீவிர கம்யூனிச அமைப்பின் மூளை பெருமாள் வாத்தியாரை தேடும் படலத்தில் காவல்துறை நிகழ்த்துகின்ற வன்முறைகளை படம் நெடுக பேசியிருக்கிறது. ஒவ்வொரு காட்சியமைப்பின் முடிச்சிகளும் அடுத்தடுத்த காட்சியமைப்பில் அவிழ்க்கப்படுகிறது.
அரசு, அரசாங்கம், போலிஸ் Vs மக்கள் படையை மையப்படுத்திய காட்சியமைப்புகளில் முதலில் பார்வையாளர்களிடத்தில் கடத்துகிற, மக்கள் படை மீதான வெறுப்புணர்வும், போலிஸ் மீதான பரிதாப உணர்வும் காட்சிகள் நகர நகர ஒன்றிலிருந்து இன்னொன்றிருக்கு நகரரும்படியான அருமையான திரைகக்கதையை அமைத்திருக்கிறார் வெற்றிமாறன்.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறப்பான பாடல்களையும் தரமான பின்னணி இசையும் கொடுத்து மீண்டும் ஒருமுறை தான் ஒரு இசை அரசர் என்பதை நிரூபித்துள்ளார் இசைஞானி இளையராஜா. இவருடைய மெலடி பாடல்கள் நம் காதுகளை வருடுகிறது. அதேபோல் சிறப்பான பின்னணி இசை மூலம் படத்திற்கு ஜீவன் கொடுத்துள்ளார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் காடுகள் சம்பந்தப்பட்ட காட்சிகளும், போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது
இளையராஜா எனும் இசைப்பேராளுமையின் ஒரு சிறு துளியை அறிந்து கொள்ள விடுதலை திரைப்படத்தின் கடைசி 25 நிமிடங்களைக் கேளுங்கள்..
விடுதலை - வெற்றிமாறன் அடுத்த சம்பவம்