நில அளவைத்துறை ஆவணங்களை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய, 'க்யூஆர்' கோடு வசதி செய்யப்பட்டிருக்கிறது.

கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட, 11 வருவாய் வட்டங்களில் அடங்கியுள்ள, 296 கிராமங்கள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட, 13 வருவாய் கிராமங்கள், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 3 வருவாய் கிராமங்கள், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட, 2 வருவாய் கிராமங்களின் நில ஆவணங்களான அ-பதிவேடு, சிட்டா, நகர நிலப்பதிவேடு, புலப்படம் மற்றம் நகரளவை வரைபடம் ஆகியவற்றை, பொதுமக்கள் எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில், https://eservices.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

இதில் பதிவிறக்கம் செய்யப்படும் ஆவண நகல்களில், அரசு அலுவலர்களின் கையெழுத்து தேவையில்லை; 

நில ஆவணங்கள் சட்டப்படி செல்லுத்தக்கது என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே, பட்டா மாறுதல் கோரும் மனுவை, இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டிருக்கிறது. https://tamilnilam.tn.gov.in/citizen.

அனைத்து கிராம படங்களும், https://tnlandsurvey.tn.gov.in என்ற இணைய தளத்தில் கட்டணம் செலுத்தி, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நகர ஊரமைப்புத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட மனை வரைபடங்களின்படி, நில ஆவணங்களில் உடனுக்குடன் உட்பிரிவு மாறுதல் செய்ய, தமிழ்நிலம் தரவு தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறது.

 மனை அபிவிருத்தியாளர்கள் இவ்வசதியை பயன்படுத்தி, விண்ணப்பிப்பதன் மூலம் மனையிடத்தை கிரையம் செய்பவர்கள், உடனுக்குடன் பட்டா பெறலாம்.

பத்திரப்பதிவின் போது, சார் பதிவாளர் அலுவலகத்தில் பெறப்படும் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மற்றும் மனுதாரர்களால் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்களின் நிலையை அறிந்துகொள்ள, https: //eservices.tn.gov.in/eservicesnew/home.html வசதி செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல், மொபைல் போனில் 'ஸ்கேன்' செய்து, இவ்வசதிகளை பெறும் வகையில், 'க்யூஆர்' கோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது என, நில அளவைத்துறையினர் தெரிவித்தனர்.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்