அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்..!


அசல் சொத்து பத்திரம் தொலைந்து விட்டால் நீங்கள் உடனே செய்ய வேண்டிய ஐந்து செயல்களைப் பற்றி தான் இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பொதுவாக உங்களுடைய சொத்தை அடமானம் வைத்து கடன் பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக அதற்கு உங்களுடைய அசல் சொத்து பத்திரம் தேவைப்படும்.

அந்த பத்திரம் இல்லை என்றால் உங்களால் கண்டிப்பாக யாரிடமும் கடன் பெற முடியாது,அந்த பத்திரம் இல்லை என்றால் நீங்கள் உங்களுடைய சொத்திற்கு உரிமைக்கு வர முடியாது.

எனவே மிக முக்கியமாக கவனமாக கருதப்படும் இந்த அசல் சொத்து பத்திரம் கட்டாயம் உங்களுடைய நிலங்களுக்கு தேவை குறிப்பாக வங்கிகளில் கடன் பெற முடியாது.

வங்கிகளில் கடன் பெற வேண்டும் என்றால் சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களும் தேவைப்படும்.

ஆக அந்த ஆவணங்கள் பத்திரமாக வைத்துக் கொள்வது மிக முக்கியம்.

ஒருவேளை துரதிஷ்டவசமாக நீங்கள் அந்த ஆவணத்தை தொலைத்து விட்டால் அது தொடர்பான நகல் ஆவணத்தை உங்களால் பெற முடியும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

FIR கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

Duplicate copy of property document best 2023 உங்களுடைய சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டால் உடனடியாக நீங்கள் உங்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்.


அதன்பிறகு FIR பதிவு செய்ய வேண்டும் அதாவது உங்களுடைய அசல் சொத்த ஆவணம் தொலைந்து விட்டதாக தெரிவித்து FIR பதிவு செய்யுங்கள்.

இது சொத்தின் உரிமையாளரின் எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும், என இந்திய அரசியலமைப்பு அடிப்படை சட்டம் சொல்கிறது.

அசல் சொத்து பத்திரம் தேட வேண்டும்

Duplicate copy of property document best 2023 உங்களுடைய சொத்து பத்திரம் தொலைந்து விட்டது என்றால் நீங்கள் துண்டு சீட்டு பிரச்சாரம் மூலம் விளம்பரம் செய்யலாம் அல்லது செய்தித்தாள்கள் மூலம் விளம்பரம் செய்யலாம்.

அந்த விளம்பரத்தின் சொத்தின் விவரங்கள், இழந்த ஆவணத்தின் பெயர் மற்றும் காணாமல் போன ஆவணங்களை யாராவது கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்படும் என நீங்கள் விளம்பரம் செய்து உங்களுடைய சொத்து பத்திரத்தை தேடலாம்.

பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை

Duplicate copy of property document best 2023 சொத்தின் விவரங்கள் தொலைந்து ஆவணங்கள் FIR நகல் மற்றும் செய்தித்தாள் விளம்பரம் அறிவிப்பின் நகல் ஆகியவற்றை பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து.

முத்திரைத்தாளில் ஒப்பந்தம் செய்ய வேண்டும், பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த சான்றிதழை நோட்டரி மூலம் சான்றளிக்கப்பட வேண்டும்.

தொலைந்து போன ஆவணங்களுக்கு நகல் பத்திரம் விண்ணப்பம்

Duplicate copy of property document best 2023 சொத்து பத்திரத்தின் நகல்களை பெற சொத்து பதிவாளர் அலுவலகத்தில் அவர்கள் கேட்கும் ஆவணங்களை விண்ணப்பிக்க வேண்டும்.

நகல் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்