தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். ஒரு நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு வேலை பார்ப்பதை விட சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்கையில் நாமும் முன்னேற வேண்டும் என்று இந்த உலகில் பல இளைஞர்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்குமே வெவ்வேறு விதமான துறையை பற்றிய திறமை இருக்கும். எந்த துறையை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியுமோ அந்த துறையில் தொழிலை தொடங்கினால் நிச்சயம் உங்களுடைய வருமானத்தை அதிகரிக்க முடியும். அந்த வகையில் இந்த பதிவில் காளான் தொழிலில் எப்படி லாபத்தை பெற முடியும் மற்றும் காளான் தொழில் ஆரம்பிப்பதற்கு தேவையான தகவல்களை இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
தண்ணீர்:
தினமும் 15 ஹெச்.பி. மின்சாரம் மற்றும் 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் தொடர்ந்து கிடைக்கும்படி இருக்க வேண்டும்.
சந்தை வாய்ப்பு:
இறைச்சி மற்றும் அசைவ உணவு வகைகளுக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகிறது காளான். சீக்கிரத்தில் ஜீரணமாவதுடன் சைவப் பிரியர்களின் விருப்ப உணவாகவும் இருக்கிறது. காளான் வளர்ப்பு வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே வர்த்தக அந்தஸ்தை பெற்றுவிட்டது. தற்போது வளரும் நாடுகளிலும் இந்த தொழிலுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது.
சூப் தயாரிக்க, காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க, வெஜிடபிள் பிரியாணி செய்ய, ஊறுகாய் செய்ய என பல வகைகளில் உணவுப் பிரியர்களால் விரும்பப் படுகிறது. காளான் பவுடர் பால் கொதித்த நீரில் கலந்து டானிக்காக குடிக்கவும் பயன்படுகின்றது.
பெரிய நகரங்களில் இப்போது அதிகளவில் காளான் பயன் படுத்தப்படுவதால் நகரங்களில் காளான் வளர்ப்பு யூனிட் அதிகளவில் வரத் துவங்கியுள்ளது. தவிர, காளான் வளர்ப்பில் இன்னமும் பலரது கவனம் அதிக அளவில் விழாததால், இத்தொழி லுக்கு இப்போது நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது.
காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்:
காளானில் நிறைய வகைகள் உள்ளது, அதில் குறிப்பாக சொல்ல போனால் Button Mushroom நிறைய முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் கடைகளில் பார்த்தால் தெரியும் டின்களில், டப்பாகளில் விற்பனையாகும் காளான்கள் பெரும்பான்மையானது இந்த Button Mushroom தான்.
இப்போதும் மக்கள் வாங்கும் காளான்களில் Button Mushroom முதலிடம் வகுத்துள்ளது என்றே சொல்லலாம்.
சைவ பிரியர்களுக்கு இந்த காளான் வகை அதிகம் பிடித்துள்ளது. கொலஸ்ட்ரால் இல்லாத உணவு எது என்று கேட்டால் அது நிச்சயம் காளான் தான்.
இதில் இருக்கும் வைட்டமின் b உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது, அதனால் உடலை கட்டுகோப்பாக வைத்திருக்கும் நபர்கள் காளான்களை தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
வகைகள்:
Oyster
Crema
Porcini
உற்பத்தி முறை:
தரமான சிப்பி காளானை உற்பத்தி செய்ய வேண்டும் எனில், அதனை சிறந்த முறையில் வளர்க்க வேண்டும். அதாவது, சிறந்த மூலப்பொருள் மற்றும் சரியான வெப்பநிலை போன்றவை காளான் வளர்ப்புக்கு அத்தியாவசிய தேவைகள் ஆகும். 20 முதல் 25 சென்டிகிரேடு வெப்பநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிப்பி காளான் தயாரிக்க வைக் கோலை அதற்கென இருக்கும் பிரத்யேக இயந்திரத்தில் போட்டு வேக வைக்க வேண்டும். பிறகு அதனை 50% காய வைத்து பாலித்தீன் கவரில் போட வேண்டும். இதே கவருக்குள் காளான் விதையையும் போட்டு கட்டி தொங்கவிட வேண்டும். 300 கிராம் எடை கொண்ட காளான் விதைக்கு நான்கு கிலோ வைக்கோல் போட வேண்டும். இது ஒரு பாலித்தீன் பைக்கான அளவு.
இதற்கென பிரத்யேகமாக 550 சதுர அடிக்குள் தென்னை ஓலையால் குடிசைக் கட்ட வேண்டும். கீழே தரையில் ஆற்று மணலைப் பரப்பி அதில் தண்ணீர் ஊற்றி வரவேண்டும். இந்த சூழ்நிலை காளான் வளர்ப்பிற்கு ஏற்ற தட்டவெப்ப நிலையைக் கொடுக்கும். விதைகள் போட்டிருக்கும் பாலிதீன் பைகளில் 20 ஓட்டை போட வேண்டும்.
இந்நிலையில் 30-35 நாட்களுக்குப் பிறகு சிப்பி காளான் வெளியில் வர தொடங்கும். காலை இரண்டு மணிநேரம் மாலை இரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
காளானை மாலையில் அறுவடை செய்தால் மறுநாள் காலையில் பயன் பாட்டிற்கு கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும். காளான்களை அறுவடை செய்ததும் உடனடியாக சப்ளை செய்துவிட வேண்டும் என்பது முக்கியமான விஷயம். எனவே அறுவடை செய்தவுடன் ஓட்டல்கள், ரெஸ்டாரென்ட், கிளப் போன்ற இடங்களில் சப்ளை செய்யலாம்.
நிலம் மற்றும் கட்டடம்:
10 கிலோ காளான் உற்பத்தி செய்ய 700 சதுர அடி நிலம் தேவைப்படும்.
காளான் வணிகத் திட்டம் :
காளாண் வளர்ப்பை நீங்கள் குடிசையில் ஆரம்பிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் காளானின் வெப்பநிலை 20 – 28 Degree இருக்க வேண்டும், இந்த வெப்பநிலையை மெயின்டைன் செய்வதற்காக குடிலில் ஆரம்பிப்பது நல்லது.
இந்த தொழிலை செய்வதற்கு விதைகள் மிகவும் முக்கியம். இந்த விதைகளை எங்கு விதைக்க போகிறிர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். பின்னர் அந்த விதையை விதைத்து விட்டு அதன் மேல் வைக்கோல் பின் அதற்கு மேல் விதைகள் அதற்கு மேல் வைக்கோல் என மொத்தம் 8 லேயர் உருவாக்கி 25 நாட்கள் Preserve பண்ண வேண்டும்.
25-வது நாள் Fungus Form ஆகும். அதற்கு Spawning என்று பெயர். பின் இதை பிரித்து Casing Soil-ல் கம்போஸ்ட் செய்தால் நிறைய காளான்கள் உற்பத்தியாகும். இந்த விதைகள், Casing Soil கடைகளில் விற்பனையாகிறது அதை வாங்கி நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
அறுவடை செய்யும் காலம்:
50 – 60 நாட்களில் மொட்டுக்கள் வளர ஆரம்பித்து விடும்.
காளான் வளர்ந்ததும் அதன் தலையை மட்டும் Twist செய்து எடுக்க வேண்டும்.
மண்ணை தோண்டி காளான்களை வெளியே எடுக்க கூடாது.
காளானை KMS Solution பயன்படுத்தி சுத்தபடுத்தி கொள்ளவும். பின்னர் இதை Polythene Bag அல்லது டப்பாகளில் போட்டு விற்பனை செய்ய ஆரம்பிக்கலாம்.
லாபம்:
வருமானம் பொறுத்தவரை நீங்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறீர்களோ அதை பொறுத்து அமையும்.
2 kg காளான் உற்பத்தி செய்து நாம் 1 bag முழுவதுமாக நிரப்பலாம். அப்போது உங்களுக்கு லாபம் Rs.50,000 வரை கிடைக்கும்.
இந்த தொழிலை செய்வதற்கு பெரிய இடவசதி தேவை இல்லை சிறிய இடம் இருந்தாலே நீங்கள் நல்ல வருமானத்தை பெறலாம். இதை நீங்கள் ஏற்றுமதி செய்தும் சம்பாதிக்க முடியும்.
ரிஸ்க்:
காளான் வளர்க்கும் இடம் மிகவும் சுத்தமாக இருப்பது அவசியம். காரணம், அசுத்தமான கையுடன் வேலை செய்தால்கூட பாக்டீரியாவால் பாதிப்படைந்து காளான் ஒழுங்காக வளராமல் கெட்டுப்போக வாய்ப்புண்டு. ஒரு பாலித்தீன் கவர் கெட்டு போனால்கூட அனைத்து பாலித்தீன் கவரும் கெட்டுப் போய்விடும். கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும், எனவே குறைந்த அளவே காளான் உற்பத்தியாகும். இதனை சரி செய்ய மற்ற நேரங்களில் காலை, மாலை மட்டும் தெளிக்கும் தண்ணீரை வெயில் நேரங்களில் நாள் முழுவதும் தெளிக்க வேண்டும். சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீரை விட்டு வந்தால் காளான் வளரத் தேவையான தட்பவெப்ப நிலை கிடைக்கும். பனிக் காலத்திலும் காளான் வளர்வது குறையும்.
பிளஸ்:
அசைவ உணவுகளுக்கு மாற்றாக மட்டுமின்றி சர்க்கரை நோய் உள்ளவர்களும் காளானைப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை நோயைக் குணப்படுத்த தயாரிக்கப் படும் மாத்திரைகளில் காளான் பொடிகள் பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியமான விஷயம்.
நல்ல ஏற்றுமதி வாய்ப்பு உள்ள இத்தொழிலில் பெண்கள் அதிகளவில் ஈடுபட வாய்ப் புள்ளது. தற்போது அதிக எண்ணிக்கையில் காளான் உற்பத்தி யூனிட்டுகள் இல்லாத தால் இத்தொழிலுக்கு பிரகாச மான எதிர்காலம் இருப்பதை மறுக்க முடியாது!
காளான் உற்பத்தி செய்வதற்கு தோட்டக்கலைத் துறையில் 50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. காளான் உற்பத்தி செய்வதற்கு ஆர்வமாக இருப்பவர்கள் முடிந்த அளவிற்கு தோட்டக் கலைத் துறையை அணுகி அதன் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்