ரஜினிக்கு பாட்ஷா..! விஜய்க்கு லியோ வா..! லியோ எப்படி இருக்கு திரைவிமர்சனம்..!

நடிகர்கள்: விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன்
இசை: அனிருத்
நேரம்: 2 மணி நேரம் 43 நிமிடங்கள்
இயக்கம்: லோகேஷ் கனகராஜ்

விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் என திரை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இப்படம் LCU-வா, இல்லையா அப்படி LCU-வாக இருந்தால் கைதி படத்திலிருந்து யார் யாரெல்லாம் வர போகிறார்கள், விக்ரம் படத்தில் இருந்து எந்தெந்த கதாபாத்திரம் லியோவில் என்ட்ரி கொடுக்க போகிறது என உச்சத்தில் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

இப்படி லியோ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அளவு கடந்த எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு முழுமையாக லியோ பூர்த்தி செய்துள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.

சரி கதைக்கு வருவோம் 

காஷ்மீரில் காஃபி ஷாப் வைத்து நடத்தி வரும் பார்த்திபன் (விஜய்) தனது மனைவி , மகன், மகளுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்  அமைதியாக செல்லும் அவர்களுடைய வாழ்க்கையில் மிஸ்கின் மற்றும் சண்டி Gang மூலம் பிரச்சனை ஏற்படுகிறது.

இதில் சிக்கிக்கொள்ளும் விஜய்யின் அடையாளம் பத்திரிகைகள் மூலம் தாஸ் & கோ-விற்கு தெரியவர லியோ இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என ஆண்டனி தாஸ் (சஞ்சய் தத்) லியோவை கொல்வதற்காக காஷ்மீருக்கு செல்கிறார்.

தன்னை சுற்றி இருக்கும் பலர் நீ தான் லியோ நீ தான் லியோ என்று கூறினாலும் நான் லியோ இல்லை நான் பார்த்திபன்  என உறுதியாக இருக்கிறார் விஜய்.

பார்த்திபனாக வாழ்ந்து வரும் இவருக்கும் லியோவிற்கும் என்ன சம்பந்தம்? இவர் பார்த்திபனாக நடித்து ஊரையும் உலகையும் ஏமாற்றுகிறாரா? ஏன் தாஸ் & கோ லியோவை கொல்ல முயற்சி செய்கிறார்கள்? இதன் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகன் விஜய்யை முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் நடிக்க வைத்துள்ளார் லோகேஷ் இதுவரை நாம் பார்க்காத ஒரு விஜய்யின் நடிப்பை கண்டிப்பாக லியோ படத்தில் பார்க்கலாம். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டுகிறார் விஜய். இதற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் படத்தை பார்க்கலாம் என்ற அளவிற்கு இருந்தது விஜய்யுடைய உழைப்பு. முற்றிலும் மாறுபட்ட நடிப்பாக இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் விஜய் நம்மை ஏமாற்றவில்லை.

திரிஷாவின் நடிப்பு அருமை கில்லி, திருப்பாச்சி படங்களை தொடர்ந்து மீண்டும் இந்த ஜோடி சக்ஸஸ் ஆகியுள்ளது. குறிப்பாக விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையே நடக்கும் எமோஷ்னல் காட்சியை அழகாக வடிவமைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ் வில்லன் சஞ்சய் தத் தோற்றமே நம்மை மிரள வைக்கிறது.

விஜய்யை திருமலையில் இப்படி பார்த்த நியாபகம் இளமையாக தெரிகிறார்.

அதே போல் வில்லன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மாஸ் காட்டிவிட்டார் விஜய் - சஞ்சய் தத் மற்றும் விஜய் - அர்ஜுன் இடையே நடக்கும் சண்டை காட்சிகளை வடிவமைத்திருந்த விதம் சூப்பர். திரைக்கதை ஓட்டத்திற்கு உதவிய கவுதம் மேனன் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருந்தது.

மேத்யூ தாமஸ், மடோனா சபாஸ்டியன், மன்சூர் அலி கான், இயல், ஜார்ஜ் மரியம், சாண்டி மாஸ்டர், ஜனனி போன்றவர்களின் கதாபாத்திரத்திற்கு நல்ல ஸ்கோப். ஆனால் மிஷ்கின், பிரியா ஆனந்த், பாபு ஆண்டனி, ராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கு பெரிதளவில் ஸ்கோப் இல்லை. இதில் எதற்காக இவர் என்ட்ரி கொடுத்தார் என்றே தெரியவில்லை. அப்படி இருந்தது அனுராக் காஷ்யப் கேமியோ.

முதலில் லோகேஷ் கனகராஜின் பெரும் முயற்சிக்கு பாராட்டுக்கள். காலம் காலமாக நாம் பார்த்த அதே கதைக்களம் தான் லியோவும் என்றால் கூட அதில் தன்னுடைய திரைக்கதையால் படம் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளார்.

குறிப்பாக Hyena-வை வைத்து உருவாக்கிய காட்சி, கொஞ்சம் கூட அது VFX இல்லை என்பது போல் வடிவமைத்த விதம் செம மாஸ். அதற்கு VFX-ல் உழைத்த அனைவரையும் நாம் பாராட்ட வேண்டும். ஏனென்றால் கொஞ்சம் கொஞ்சமாக நம் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டு இருப்பதை லியோவில் வரும் இந்த Hyena காட்சி உறுதி செய்கிறது.

அதே போல் சண்டை காட்சிகளை வடிவமைத்த விதமும் சூப்பர். காஃபி ஷாப்பில் நடக்கும் சண்டை மிரட்டுகிறது. அதை தொடர்ந்து விஜய் போடும் ஒவ்வொரு சண்டையையும் அருமை அதற்கு லோகேஷ் கனகராஜின் பங்கு 30% சதவீதம் என்றால் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பு அறிவு மற்றும் சண்டை காட்சியில் நடித்த ஸ்டண்ட் கலைஞர்களின் உழைப்பு 70% சதவீதமாகும்.

விஜய்யின் டைட்டில் கார்டு, இடைவேளை, கிளைமாக்ஸ் LCU கனெக்ட் செய்த விதம் என திரையரங்கை தன்னுடைய இயக்கத்தால் தெறிக்க விட்டு விட்டார் லோகேஷ் கனகராஜ்.

முதல் பாதி கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் சென்றாலும், இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வு குறையாக வந்து நிற்கிறது. மேலும் லியோ கதாபாத்திரத்தை இன்னும் கூட வலுவாக காட்டியிருக்கலாம். இதில் சிறிதாக லோகேஷ் சொதப்பிவிட்டாரோ என்று தோன்றுகிறது. இவைகளை மட்டும் கொஞ்சம் சரி செய்து இருந்தால் லியோ படத்தில் குறை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்து இருக்கும்.

மேலும் அனிருத் இசையைப் பற்றி எவ்வளவு தான் பாராட்டுவது. இவருடைய பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி வெறித்தனமாக இருந்தது. வில்லன்களுக்கு இவர் கொடுத்த பின்னணி இசையும் வேற லெவல்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். அதற்கு பாராட்டுக்கள். பிலோமின் ராஜ் எடிட்டிங் சூப்பர், படத்தை ரசிக்க வைக்கிறது.

இரண்டாம் பாதியில் சில இடங்களில் ஏற்பட்ட தொய்வு லியோ கதாபாத்திரத்தை இன்னும் கூட வலுவாக காட்டி இருக்கலாம்.

சில இடங்களில் ஜெயிலர், டாக்டர் போன்ற படங்களின் பார்வை.

நான் பொல்லாதவன் தலைவர் பாடல் செம வெய்ட்டு.

உண்மையிலேயே அவ்வளவு பெரிய துப்பாக்கியை தூக்கி நீங்க தான் சுட்டிங்களா.

மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கும், ஆக்ஷன் ரசிகர்களுக்கும் வெறித்தனமான விருந்து தான் லியோ.

Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்