ஆதார் கார்டு போல வருகிறது அபார் கார்டு நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே அடையாள அட்டை

சென்னை: இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. மத்திய அரசு மூலம் இந்தியா முழுக்க அறிமுகப்படுத்த உள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படும். மாணவர்களின் முன்னேற்றம், செயல்பாடுகளை கண்காணிக்க வாழ்நாள் முழுவதும் அடையாள எண் வழங்கப்படும்.

ஆதார் அட்டை போல மாணவர்களின் முன்னேற்றங்களை இதன் மூலம் கண்காணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அட்டைக்கு அபார் - APAAR அடையாள அட்டை என்று பெயர் வைக்கப்பட உள்ளது.

ஆதார் என்பது 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும். இது மக்களின் பயோமெட்ரிக் மற்றும் அடையாள தரவுகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்திய குடிமக்கள் மட்டும் பெறக்கூடிய அடையாள அட்டையாகும். இந்திய அரசாங்கத்தால் ஜனவரி 2009 இல் நிறுவப்பட்ட சட்டப்பூர்வ ஆணையமான இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) இந்த அட்டை தரவுகள் அனைத்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ஆதார் கட்டாயம்: இந்தியாவில் பல்வேறு சேவைகளை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் ஆகும். ஆதார் அட்டையை பல்வேறு சேவைகளுடன் இணைக்க வேண்டும் என்றும் விதிகள் உள்ளன. அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக மக்களை சென்று சேர்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு வசதியாக, சேவைகளை கண்காணிப்பதற்கு வசதியாக, முறைகேடுகளை தடுப்பதற்கு வசதியாக இந்த ஆதார் அட்டை கொண்டு வரப்பட்டு உள்ளது.

ஜூலை 2014 இல் அரசு அலுவலகங்களில் ஆதார்-இயக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் பயோமெட்ரிக் முறை ரேஷன் கடைகள் தொடங்கி சிம் கார்ட் வாங்குவது வரை பல இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஆதாரை கட்டாயமாக்குவது குறித்து வெளியுறவு அமைச்சகம் சில வருடங்களுக்கு முன் முடிவெடுத்தது.

அதேபோல் ரேஷன் அட்டை, பிஎப் கணக்கு, வங்கி கணக்கு, பான் அட்டை, மின்சார சேவை என்று பல சேவைகளில் ஆதார் அட்டை கட்டாயம் ஆகி உள்ளது. 2020 ஆம் ஆண்டில், UIDAI ஆனது ஹாலோகிராம்கள், மைக்ரோ டெக்ஸ்ட், Ghost படங்கள், கில்லோச் வடிவங்கள், கண்ணுக்கு தெரியாத லோகோக்கள் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் PVC ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது] PVC ஆதார் அட்டையை UIDAI இன் இணையதளத்தில் எந்த ஆதார் வைத்திருப்பவராலும் ஆர்டர் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இப்படி ஆதார் அட்டை மக்களுடன் மக்களாக இணைந்துவிட்டது.

அபார் அட்டை: இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அட்டைக்கு அபார் - APAAR அடையாள அட்டை என்று பெயர் வைக்கப்பட உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படும். மாணவர்களின் முன்னேற்றம், செயல்பாடுகளை கண்காணிக்க வாழ்நாள் முழுவதும் அடையாள எண் வழங்கப்படும்.

மாணவர்கள் எங்கே படிக்கிறார், கல்லூரி செல்கிறார்களா? படிப்பை பாதியில் நிறுத்துகிறார்களா? என்பதை இதன் மூலம் கண்காணிக்க முடியும். பள்ளி இடைநிற்றலை இதனால் தடுக்க முடியும். மத்திய அரசு மூலம் இந்தியா முழுக்க அறிமுகப்படுத்த உள்ளது. ஆதார் அட்டை போல மாணவர்களின் முன்னேற்றங்களை இதன் மூலம் கண்காணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை