எனினும், இன்னமும் கணினிப் பயன்பாடு 100 சதவீதத்தை எட்டவில்லை.. தமிழ்நாடு முழுவதும் 12,000-க்கும் அதிகமான கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், அந்தந்த ஊராட்சிகளுக்கு சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்திவருகின்றன. இப்போது, நேரில் சென்று இந்த வரிகளை செலுத்தும் சூழலும் உள்ளது..
சொத்துவரி: இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, கிராம ஊராட்சிகளில் வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் இணையதளம் மூலமாக செலுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்ததுடன், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டிருந்தது.
அந்தவகையில், கிராம ஊராட்சிகள் பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு பணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது என்றும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கிராம ஊராட்சிகளுக்கான வரிகளை, ஆன்லைனில் செலுத்த வசதியாக, புதிய இணையதளத்தை, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில், துவக்கி வைத்திருக்கிறார்.
கிராம ஊராட்சிகள்: கிராம ஊராட்சிகளுக்கு, பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் வரி மற்றும் வரியில்லாத கட்டணங்களை, இணைய வழியில் செலுத்த, https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் இதற்காகவே பிரத்யேகமாக துவக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யு.பி.ஐ., செயலி பயன்படுத்தி, எந்த நேரத்திலும் கட்டணம் செலுத்தலாம்.. இதன்காரணமாக, ஊராட்சி பணியாளர்களின் பணிச்சுமை பெருமளவு குறைவும்.
ஊராட்சியில் பொது நிதி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம், அரசு திட்டப்பணிகள் என, பல்வேறு பொறுப்புகளை மேற்கொள்ள, 11 வகையான கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. அதை எளிமைப்படுத்தும் விதமாக, 3 கணக்குகளை மட்டுமே பராமரிக்கும் நிலையும், இந்தியன் வங்கி ஒத்துழைப்புடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சூப்பர் : இதுதொடர்பாக, தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சிகள் கணக்கு திட்டத்தின், 'TNPASS' என்ற புது வெப்சைட்டினை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்திருக்கிறார். தமிழக அரசின் இந்த ஏற்பாடுகள் எல்லாம், பொதுமக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.