இயக்கம் - நீலேஷ் கிருஷ்ணா
இசை - தமன்
நடிப்பு - ஜெய்,நயன்தாரா, ...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரசாதம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் தான் அன்னபூரணி மீன் வாசம் கூட பிடிக்க விடாமல் பல கட்டுப்பாடுகளுடன் மகளாக வளரும் இவர் இந்தியாவின் தலைசிறந்த சமையல் கலை நிபுணராக வேண்டும் என ஆசைப்படுகிறார்.
ராஜா ராணியில் பார்த்த அதே முகங்கள் சிறிது கூட மாற்றமில்லை ஜெய், நயன்தாரா, சத்யராஜ்
செஃப்பாக வேண்டும் என்றால் அங்கே நான்வெஜ் சமைக்க வேண்டும் அதனால் படிக்கக் கூடாது என்கிறார் அவரின் தந்தை அதையும் மீறி அவள் படிக்கச் செல்கிறாள்.
அறிவுரை வழங்கி ஊக்குவிப்பதை தவிர ஜெய்க்கு வேறு எந்த வேலையும் கொடுக்கவில்லை.
நமது தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் ,உன் உணவு உன்னோட உரிமை,ஜெயிச்சாலும் தோத்தாலும் நான் அப்பவே சொன்னேன் இல்ல அப்படினு சொல்ல ஆளுங்க இருப்பாங்க,
எந்தக் கடவுளும் கறி சாப்பிடக்கூடாதுனு சொல்லல,
பிரியாணிக்கு ஏது மதம், அது ஒரு எமோஷன் போன்ற டயலாக்குகள் கைத்தட்டல் வாங்குகின்றன.
இந்தியாவின் சிறந்த செப்பாக நடித்திருக்கும் சத்யராஜ், நாயகி நயன்தாராவிற்கு உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். சிறிய வேடத்திலேயே வந்தாலும் கே.எஸ்.ரவிக்குமார் மனதில் பதியும் படி நடித்திருக்கிறார்.
தமன் இசையில் கர்நாடக சங்கீதம் சம்பந்தப்பட்ட பாடல்கள் மனதை வருடி இருக்கின்றன.
நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் பார்க்கும் படமாக வந்திருக்கிறது. குறிப்பாக, பெண்கள் மத்தியில், இந்தப்படம் நன்றாக ரீச் ஆகும்.
அன்னபூரணி - சமையல் ராணி!