உலகிலேயே மிகப்பெரிய அறிவாசான் டாக்டர் அம்பேத்கர் சிலை ஆந்திராவில் இன்று திறப்பு..!

ஹைதராபாத்: 400 டன் உலோகத்தால் உருவான  உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையை, ஆந்திராவில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்க உள்ளார். இந்த பிரம்மாண்டமான அம்பேத்கர் சிலைக்கு சமூக நீதிக்கான சிலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்

இந்த சிலை கடந்த 2 வருடங்களாக கட்டப்பட்டு வந்தது.. 55 தொழில்நுட்ப வல்லுநர்கள், உதவியாளர்களுடன், 500 முதல் 600 ஆட்களை கொண்டு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

சிலை அமைந்துள்ள பகுதி ஸ்மிருதி வனம் என அழைக்கப்படுகிறது. இங்கிருக்கும் அம்பேத்கர் ஸ்மிரிதி வனத்தில் 81 அடி பீடத்தின் மேல் சுமார் 125 அடி உயரத்துக்கு, இந்த உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.. மொத்தம் 18.81 ஏக்கர் பரப்பளவில், ரூ. 404.35 கோடி செலவில் இந்த சிலைகளும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் கட்டப்பட்டுள்ளன.

இதற்காக 400 மெட்ரிக் டன் துரு பிடிக்காத எஃக்கும், 120 மெட்ரிக் டன் வெண்கலமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிலையின் பீடம், பவுத்த கட்டடி கலையின் காலச்சக்கர மண்டலம் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. அங்கிருக்கும் பீட பகுதி, சுமார் 11,140 கன மீட்டர் கான்க்ரீட்டாலும், 1445 மெட்ரிக் டன் டிஎம்டி கம்பிகளாலும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.. மொத்தமாக இளஞ்சிவப்பு மணல்கற்கள் கொண்டு பூசப்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள, எக்ஸ்பிரியன்ஸ் சென்டரில் அவரின் வாழ்க்கை தொடர்புடைய விஷயங்கள், எலக்ட்ரானிஸ் காட்சிகளுடன் காட்சிப்படுத்தப்படும். மேலும், அம்பேத்கர் வாழ்க்கையை சித்தரிக்கும் கலை படைப்புகளுடன் கூடிய 166 தூண்களும் நிறுவப்பட்டுள்ளன..

இந்த நினைவு சின்னத்தின் முன்பகுதியில் ஆறு நீர்நிலைகள் காணப்படுகின்றன.. இன்னொரு பக்கம், இசை செயற்கை நீரூற்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.. இதைத்தவிர, 2000 பேர் உட்காரக்கூடிய வகையில் மாநாட்டு அரங்கம், உணவு அரங்கம், குழந்தைகளுக்கான விளையாட்டு இடம், நடைபாதைகள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.. மேலும், அம்பேத்கரின் சிலைக்கு அருகே பொதுமக்களை ஈர்க்கும் வகையில் வண்ண வண்ண பூச்செடிகளைக் கொண்ட கண்கவர் பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாநிலத்துக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கே மகுடமாக விளங்கும் இந்த சிலை "சமூக நீதிக்கான மிகச் சிறந்த சிற்பம்" என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் முதல்வர் ஜெகன் மோகன். அதுமட்டுமல்லாமல், வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, ''பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை, அனைத்து துறைகளிலும் மாற்றியமைத்த மாபெரும் ஆளுமை டாக்டர் அம்பேத்கர்'' என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

விஜயவாடாவில் உள்ள இந்த அம்பேத்கரின் சிலையானது, நாட்டின் உயரமான மதச்சார்பற்ற தலைவரின் சிலையாகவும் கருதப்படுகிறது...

ஆனால், டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது 125 அடி உயர சிலையை தெலங்கானாவில், கே.சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டு முதல்வராக இருந்தபோது திறந்து வைத்திருந்தார்.. இதுதான் உலகின் 2வது உயரமான அம்பேத்கர் சிலையாக கருதப்பட்டது.. ஆனால், உலகில் உள்ள உயரமான 50 சிலைகளில் விஜயவாடாவில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையும் ஒன்றாகியிருப்பது கூடுதல் பெருமையை பெற்றுத்தந்துள்ளது.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை