இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) இராதாபுரம் தாலுகா குழுவின் சார்பில், இராதாபுரம் பேருந்து நிலையம் எதிரில் "சமத்துவ பொங்கல் விழா" கொண்டாடப்பட்டது.
சங்கத்தின் தாலுகா தலைவர் உதயம் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு வருகை தந்தவர்களை தாலுகா துணைத்தலைவர் ரமேஷ் வரவேற்று உரை நிகழ்த்தினார்.
ஏ.ஆர். அறக்கட்டளை நிறுவனர் விஜயாபதி ஏ.ஆர்.ரஹ்மான், விஜயாபதி ஒன்றிய கவுன்சிலர் ஆவுடை பாலன், சமூக ஆர்வலர் சிவ பிரேம்குமார், இராதாபுரம் ஒன்றிய கவுன்சிலர் பரிமளம் கருணாநிதி, உதயத்தூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் மணிகண்டன், முன்னாள் ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாசானம், சிதம்பராபுரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் முருகன், சிதம்பராபுரம் ஊராட்சி தலைவர் பேபி ராணி, மாதர் சங்க தோழர்கள் நாச்சியார், அமுதா, ரமணி, ஆனந்தி, விவசாய சங்கத்தின் தலைவர் ரஜினி தோழர், வாலிபர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் குட்டன், இராதாபுரம் தாலுகா செயலாளர் ராஜன், சுபா, லெனின் ராஜா, இசை முருகன், காடுதுலா அருண்,உதயத்தூர் இசை முருகன் இளையநயினார்குளம் அருள், சமத்துவபுரம் ஜெயக்குமார், பட்டார்குளம் ரவி, நக்கனேரி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் சங்கத்தின் தாலுகா துணை செயலாளர் சிவா நன்றி தெரிவித்து விழாவை நிறைவு செய்தார்.
Tags
சமத்துவ பொங்கல்
சமத்துவ பொங்கல் இராதாபுரம்
DYFI
Dyfi சமத்துவ பொங்கல்
Dyfi Radhapuram
RADHAPURAM