நடிகர் விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் மூலம் சமீபத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார் என்று கூறப்படுகிறது.
1999 ஆம் ஆண்டில் ரஜினிக்கு அழைப்பு விட்டும் ஷங்கரின் ’முதல்வன்’ படத்தில் நடிக்க ரஜினி மறுத்து விட்டார். காரணம், படத்தின் டைட்டில் என்று அப்போது சொல்லப்பட்டது.
தற்போது நாற்காலி எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது ரஜினியின் அதிகாரப்பூர்வ அரசியல் அறிவிப்பை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
என் வழி தனி வழி என்பது போல, சமீபத்தில் ரஜினியின் வாய்ஸ், ‘வந்தால் ஜெயிக்கணும்’ என்று வெளிப்பட்டது ! ஜெயித்தால் அமரப் போவது இந்த நாற்காலிதான் என்று சொல்லாமல் சொல்ல, படத்தின் பெயரையே ‘நாற்காலி’ என வைத்துள்ளார்கள்!
ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி, இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.