டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்போம்.
டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ
டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர்
டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு
டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி வைடு ஆங்கில் லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் + ஏஐ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்;தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு
அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ
டெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
 புளூடூத், ஜிபிஎஸ், டூயல்
4 ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், டூயல் சிம், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டடெக்னோ ஸ்பார்க் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,499-ஆக உள்ளது.மேலும் இந்த சாதனம் சில ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.